பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272


272 வயங்குபெருங் கருணகிறை மலர்க்கண்க ளமுதுாற்ற கலங்குலவு மணிமகுடம் நற்றலைமைப் பொருள்பகரப் புறவிருளும் அகவிருளும் புகாப்புனித நிலையத்தே அருளுருவாய்ப் பொலிந்தோங்கும் அற்புதமார் பரஞ்சோதி.” (புயங்க அரசு-பாம்பு அரசு, ஆதிசேடன்) என்பது திருவேங்கடமுடையான வ ரு ணி க்கு ம் கொச்சகம்; தலைவியின் கூற்ருக வந்தது, திருவேங்கட முடையானின் பெருமையைத் தலைவி எடுத்துக் கூறுகின்ருள். இனி, ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வரும் தாழிசை களைக் காண்போம். 'குலவுபுகழ் அண்டமெலாம் கோவேகின் சந்நிதியில் இலகுதனிச் சிற்றணுவா? இலைகோணின் கோணையா, அறிவென்றும் செருக்குடையார் அகிலமெலாம் திரிந்திடினும் செறிவுறுகின் றனக்காளுர்; திகைத்தயர்வார் பிறபகர்வார். குன்ருத பேரன்பிற் குழைவார்தம் இதயத்து கின்ருயை அளியையென கிடழ்த்துவரோ அந்தணர்கள்?" (கோண்-அணுவின் சதகூறு.)