பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



10. அண்ணாமலை அருளிச் செயல்கள்

வாதவூரடிகள் பல திருத்தலங்களையும் வழிபட்டுக் கொண்டு திருவெண்ணெய் நல்லூரிலிருந்து திருவண்ணாமலைக்கு வருகின்றார். இங்குள்ள இறைவனை வழிபட்டுச் சில நாட்கள் தங்குகின்றார். இந்நிலையில் மார்கழித் திங்கள் வருகின்றது. இளமகளிர் வைகறைப்பொழுதில் துயில் உணந் தெழுந்து ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதியாகிய இறைவனது பொருள்சேர் புகழினைப் போற்றியுரைக்கின்றனர். மகளிர் தம்மையொத்த மகளிரைத் துயில்எழுப்பிக் கொண்டு சென்று பொய்கையில் நீராடி அண்ணாமலை யானை அன்பினால் பாடிப் போற்றி மார்கழி நீராடலாகிய நோன்பினைச் சிறப்புறக் கொண்டாடுகின்றனர். இந்த அழகிய காட்சியைக் காண்கின்றனர் மாணிக்கவாசகப் பெருமான். இம்மகளிர் வைகறைப் பொழுதில் ஒருவரை யொருவர் எழுப்பிச் சென்று ஆர்த்த பிறவித்துயர் கெடப் பூத்திகழும் பொய்கையில் நீராடி இறைவனை ஏத்தி வழிபடும் நிலையில் அடிகள் அம்மகளிர் கூறும் உரைகளாக


1. அண்ணாமலை (திருவண்ணாமலை) விழுப்புரம் - காட்பாடி இருப்பூர்தி வழியில் திருவண்ணாமலை நிலையத்திலிருந்து ஒரு கல் தொலைவு. பஞ்சபூதங்களுள் இது தீயைக் குறிக்கும். திருவாசகம் கூறும் ஆதியும் அந்தமும்) இல்லா அருட்பெருஞ்சேர்தி (திருவெம்-1) உருவே இப்போது மலை உருவாயுள்ளது. மலையின் உயரம் கட்ல் மட்டத்திற்கு மேல் 25.68 அடி. அருணகிரிநாதர் வாழ்ந்து முத்தி பெற்ற தலம். திருவெம்பாவை, திருவம்மானை இவற்றை மணிவாசகர் பாடியது. இத்திருத்தலத்தில். அருணகிரி அந்தாதி, அண்ணாமலை வெண்பா, சோணசைலமலை, அருணைக் கலம்பகம் ஆகியவை இத்தலத்தைப் பற்றியவை. திருக் கார்த்திகை அண்ணாமலையர் தீபம் புகழ் பெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் தீபத்தைச் சேவிப்பர். அண்ணாமலை நடு காட்டுத்தலம்,