உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக ஆட்சி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசுரிமை

19



யோடு கேட்டு ஆராய்தல் வேண்டும்; கொடை, அருள், செங்கோல் முறைமை, தளர்ந்த குடிகளைக் காத்தல் ஆகிய நான்கும் உடையவனுதல் வேண்டும்.” இவை வள்ளுவர் கருத்துக்கள்[1]. “அரசன் நெறி தவறுவானுயின் அரசியல் மாறும்; மழை பெய்ய வேண்டும் காலத்தில் பெய்யாது; அதனுல் உயிர்களுக்குத் துன்பம் நேரிடும். அதனுல் மன்னுயி ரெல்லாம் மன்னன் தன்னுயிர் என்னும் தகுதி அழிந்து விடும்”[2] என்று மணிமேகலை கூறுகிறது.

கி. பி. 12-ஆம் நூற்றாண்டில் தோன்றிய கம்பர், “அரசன் குடிகளிடம் அன்பு செலுத்துவதில் தாயை ஒத்திருக்க வேண்டும்; குடிகளுக்கு நன்மை செய்வதில் தவத்தை ஒத்திருக்க வேண்டும்; குடிகள் அறம் பொருள் இன்பங்களில் ஆழ்ந்துவிடாமல் மறுமைக்காக அவர்கள் செய்யவேண்டும் சாதனங்களே அமைப்பதில் பிள்ளையை ஒத்திருத்தல் வேண்டும்; தியோரைத் தண்டிப்பதில் நோயை ஒத்திருத்தல் வேண்டும்; அவர்களைத் திருத்துவதில் நோயைத் தீர்க்கும் மருந்தை ஒத்திருத்தல் வேண்டும்; குடிகளின் அறிவாகவும் விளங்க வேண்டும்.’’[3] என்று கூறியுள்ளார்.

“அரசன் எல்லா உயிர்களையும் தன்னிடத்தே கொண் டுள்ள உடம்பு போன்றவன்; அவன் பிற உயிர்களைத் தன்னுயிர்போல மதித்தல் வேண்டும்; வறியவன் தனக்குரிய சிறிய நிலத்தைக் கண்ணும் கருத்துமாகக் காத்துப் பயிரிடுதல் போல் அரசனும் தன் நாட்டையும் குடிகளேயும் கண்ணும். கருத்துமாகப் பாதுகாக்க வேண்டும்,”[4] என்று கூறியுள்ளது கவனித்தற்குரியது.


  1. குறள்-இறைமாட்சி.
  2. காதை 7, வரி 8-12.
  3. கம்ப ராமாயணம். அரசியல் படலம், செ. 4.
  4. கம்ப ராமாயணம். அரசியல் படலம், செ. 10.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/26&oldid=505218" இலிருந்து மீள்விக்கப்பட்டது