பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

கம்பராமாயணம்



அழிப்பது” என்று உறுதி கொண்டனர்; வேள்விப் புகை கிளம்பியது; அதைப் பற்றிக் கேள்விப்பட்டனர்; “இந்த முனிவர்களுக்கு என்ன துணிச்சல்?” அதை நினைத்து அவர்களுக்கு ஒரே எரிச்சல்.

மாமிசத் துண்டங்களை அந்த வேள்விக் குண்டங்களை நோக்கி வீசினர்; குருதிப் புனலை அக் குழிகளில் கொட்டி நெருப்பை அவிப்பதில் உறுதியாய் இருந்தனர். யாக மேடையைக் களப்பலி மேடை போலப் புலால் நாற்றம் வீசச் செய்தனர். கைவில்லை ஏந்தி நாண் ஏற்றி, அவர்கள் மீது அம்பு செலுத்தித் தொல்லைப் படுத்தினர். படைக்கலங்களை வீசி, அவர்கள் நெய்க் குடங்களை உடைத்தனர். விண்ணில் இருந்து அவர்கள், இவற்றை வீசுவது இராமன் கண்ணில் பட்டது. “அவ்வரக்கர்களைச் சுட்டிக் காட்டி இரக்கம் சிறிதும் காட்டாமல் வீழ்த்துக” என்று இலக்கு வனுக்கு அறிவித்தான். இலக்குவன் அவர்கள் மீது அம்பு செலுத்தி, அலற வைத் தான். இராமன் சரக்கூடம் அமைத்து, வேள்விச் சாலையை அவர்கள் தாக்குதலினின்று தடுத்துக் காத்தருளினான்.

அரக்கர்களின் ஆரவாரத்தைக் கண்டு, அருந்தவ முனிவர் அஞ்சி, இராமனை அணுகி முறையிட்டனர்.

“அவர்கள் குறைகளைத் தீர்த்து அருள்வதாக அபயம் அளித்தான்; “'அஞ்சற்க” என்று கூறி அரக்கர் களைத் துஞ்ச வைத்தற்கு அம்புகளைச் செலுத்தினான். எதிர்க்க வந்த மாரீசன் அதிர்ச்சி அடைந்து, உயிர் தப்பி ஓடி விட்டான். சுபாகு என்பவன் மரணப் பிடியில் அகப்பட்டு அதிலிருந்த தப்ப முடியாமல் மடிந்து தன் வாழ்க்கையை