உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குப்பைமேடு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

ராசீ

தன்னை மறைத்துக் கொள்ள முயற்சிக்கவில்லை. நான் என்னை மறைத்துக் கொள்கிறேன்.

'எனக்குக் குடிப்பழக்கம்; அது அவளுக்குப் பிடிக்க வில்லை. இதை விட்டால்தான் இங்கு வருவதாகச் சொல்லிப் போய் இருக்கிறாள்' என்று துணிந்து அவன் நம்பும்படி ஒரு பொய்யைச் சொல்லி வைத்தேன். அதை ஏற்க அவன் மறுக்கவில்லை, எழுத்தாளன் சொல்வதை வாசகன் நம்பிவிடுகிறான்.

அதைப்பற்றி அவன் மேலும் தொடராது விட்டான். உண்மையில் எனக்கும், அவளுக்கும் கருத்து வேறுபாடு நான் எழுதும் எழுத்தில் ஏற்பட்டது.

ஆபாசமாக எழுதும் எழுத்தை அவளால் மன்னிக்க முடிகிறது. மக்களை மடமையில் ஆழ்த்தும் அறியாமையை உண்டாக்கும் மதப்பிரச்சார எழுத்துக்களை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

மனித நேயத்தைப் பற்றி எழுத வேண்டிய கவிஞர் களும் சில சமயம் திசை மாறி மதங்களுக்கு விளக்கம் எழுதிக் கொண்டிருப்பது அவள் பிற்போக்கு என்று கருதுகிறாள்.

இன்று நமது நாட்டுக்குத் தேவை மத நம்பிக்கைகள் ல்ேல. தன்னம்பிக்கை; கோயில்களைப் புதுப்பிக்க அல்ல. தொழில்களை உண்டாக்க; பழைய ஞானத்தைப்பற்றி ஆராய்வது அல்ல. புதிய விஞ்ஞானத்தை அறிய இளைஞர் களைத் துாண்டுவது. வாழ்க்கையை நேசிக்கக் கற்றுத்தர வேண்டும். நன்கொடைகளை யாசிக்க அல்ல. பொதுப் பணி என்றால் அது மருத்துவமனை, அனாதை இல்லம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/30&oldid=1112805" இலிருந்து மீள்விக்கப்பட்டது