உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20


        காமன் சிவனை எதிர்த்து
        நாசம் ஆயினான், அதற்கு
        இது ஒரு அடையாளக் கொடி ;
        தீபாவளிப் பரிசு ; சூப்பர் குலுக்கல் :
        நரகாசுரனுக்கு விழா எடுத்தனர்,
        
        காம உணர்வு வாழ்வின் துாண்டுதல்
        அதுதான் காதலாகப் பரிணமிக்கிறது ;
        இரண்டு துருவங்களை ஒன்று சேர்க்கிறது :
        இன்ப வாழ்வை அமைத்துக் கொடுக்கிறது.
        
        அதுவே கட்டுக்குள் அடங்காவிட்டால்
        சிறைக் கூட்டுக்குள் தள்ளி விடுகிறது ;
        குற்றங்களுக்கு இது தாயகம் ;
        அதன் தலைவனைக் கண்டு அஞ்சுகிறார்கள்.
        
        இவனைக் கண்டு ஏன் அஞ்சுகிறார்கள் ?
        அருணகிரியார்கள் அவர்கள் ;
        அகலுகிறார்கள் ஆன்மீக வாதிகள்,
        
        அந்த இளம் பிஞ்சுகள்
        உள்ளம் இந்தக் கதைகளைக்
        கேட்டு வியந்தது ; முதியவர்களின்
        மன இயல் அறிந்தது.
        
        இதைப்போல் ஒவ்வொரு
        குடியிருப்புக்கும் ஏதோ
        ஒரு பின்கதை
        இருந்தது ; அது கேட்பதற்குச்
        செவி விருந்தாக அமைந்தது.