உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

            34

விசுவாமித்திரனுக்கு அங்குப் பெருமதிப்பு ; அந்த இளைஞனை அழைத்து வந்தபெருமை அவனைச் சார்ந்தது ; அதனால் அவனைப் பாராட்டினர் ; நன்றி நவின்றனர்.

மாமியார் மூவரும் மருமகளை மெச்சினர் ; அவளைப் பெரிதும் நச்சினர் ; நயத்தக்க அழகும் நலமும் வாய்ந்தவள் என்று அவர்கள் நாவார வாழ்த்தினர்.

சடங்குகள் பல நடந்தன; அம்மி மிதித்தல் அருந்ததி காட்டல் இப்படிச் சடங்குகள் நடந்தன.

மணமேடையில் ஒரு சிறு நிகழ்ச்சி இராமனை மறுபடியும் சீதை காணவிழைந்தாள் ; அதற்காக அவள் தன் கைவளையல்களைத் திருத்துவது போலக் கடைக் கண் நோக்கினாள் ; அவன். அதை அறிந்து உள்ளுக்குள் மகிழ்ந்தான்.

சனகன் ஒரே கல்லில் இரண்டு மாங்காயை வீழ்த்தினான் ; இல்லை நான்கு கனிகளைப் பறித்தான்

சீதை தன் வளர்ப்பு மகள் ; நிலத்தில் கண்டெடுத்த மணி; அரசு அவன் ஏற்ற பதவி; அவனே நிலத்தை உழுதான்; அந்த வகையில் அவன் ஒரு விவசாயி; அங்கே சீதை அவளுக்குக் கிடைத்தாள்.