உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

           36

அரசு என்று பெயர் வைத்துக் கொள்வதே அவன் காலத்தில் அபாயமாக இருந்தது.

இராமன் அரச மகன் ; அதனால் அவன் மீது பகை காட்டினான்; அவனைத் தடுத்து நிறுத்தினான்.

மகா மகோபாத்தியாயர் என்ற பட்டம் இவனுக்கு வடமொழியில் கிடைத்தது ; சிவதனுசுவை வளைத்தான்;சீர்மை பெற்றான்.

தென் தமிழ்மொழியில் கேள்விகள் கேட்டு அவனுக்குத் தேர்வு வைத்தான் ; தன்னிடமுள்ள மால்தனுசுவை அவன்முன் வைத்தான்.

"வில்லை வளைத்தவன் என்று விறற் புகழ் நீ கொண்டாய் ; அதற்காக ஒரு பரிசையும் பெற்றாய்; இதனை வளைத்துக் காட்டு என்று அதனை அவன் முன் நீட்டினான்.

எடுத்தான்;வளைத்தான்;அம்பை அதன் மீது தொடுத்தான்; "இதற்கு இலக்கு யாது?" என்று கேட்க "விலக்கு என் தவத்தை" என்றான்.

அவன் ஆணவம் அடங்கியது; சாதி வெறி நீங்கியது; நீதி நெறி கடைப் பிடித்தான், இவர்களுக்குச் செல்ல வழிவிட்டான்.