பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பலவகையிட்ட படலம்

123

இருந்து உயர்த்தியது. சேற்றில் கால் வைத்துப்பாடும் பாணபத்திரன் மேட்டில் பலகை மேல் நிற்க உலகு அறிந்து அவனைப் பாராட்டிப் போற்றியது. அரசன் இது அறிந்து அவனை ஆத்தான இசைப் புலவன் ஆக்கிப் பரிசும் பொருளும் தந்து அவனைச் சிறப்பித்தார். 

44. இசைவாது வென்ற படலம்

வரகுணன் ஆட்சி முடிந்தபின் அவன் மகன் இராகராசன் அரியணை ஏறினான். அவன் இன்பத்துறையில் எளியனாக நடந்து கொண்டான்; கட்டிய மனைவியர் இருந்தும் புதுமை விரும்பிய அவன் பதுமை நிகர் அழகியரைக் காமக் கிழத்தியராகக் கொண்டான். அவர்களுள் ஒருத்தி சங்கீதப் பிரியள்; பாடுவதிலும் வல்லவள்.

பாணபத்திரனின் மனைவி பாடிப் புகழ்பெற்றவள். அவ்ளைச் சாடி அவளோடு மோதிக் கொண்டாள்; பாணபத்திரன் மனைவியின் மீது பொறாமைகொண்டாள். பாண்டியனிடம் தன் மோதலை எடுத்துச் சொல்லி அவள் ஆணவத்தை அடக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டாள். இன்பம் தரும் காமக் கிழத்தியை மகிழ்விக்க அவன் விரும்பினான். ஈழ நாட்டில் இருந்து இசைபாடும் விறலி ஒருத்தியை வரவழைத்து அவளை ஊக்குவித்தான்.

விறலியை அழைப்பித்து நீ பாணபத்திரனின் மனைவியை இசைவாதுக்கு அழை; அதற்கு இசையாது இருந்தால் வம்புக்கு இழு; மறுத்தால் வசை மழை பொழிக" என்று கூறினான். அது போலப் பாணனின்