பக்கம்:குப்பைமேடு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைமேடு

55

'எனக்கே வர வர ஏன் வாழ்கிறோம் என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. நிலத்துக்குச் சுமை போல் தோன்று கின்றது. உண்பதும், உறங்குவதும் அல்லாமல் வேறு ஒன்றும் அறியாத ஒரு சூனிய நிலைதான் தெரிகிறது" என்று கூறினார்.

மூத்தவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். பூங்காக்களில் மாலை நேரங்களில் வந்து கூடுகிறார்கள். கடந்த கால வாழ்க்கையை அசைபோட்டுக் கொண்டு அந் நினைவுகளைப் பிறரோடு பகிர்ந்து கொள்கிறார்கள். நிகழ்கால அரசியலை விமர்சித்து இப்படிச் செய்யக் கூடாது. அப்படிச் செய்யக் கூடாது' என்று வழி காட் டிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு சிலர் ஆத்மீகத்தைப் பற்றி விவாதிக்கிறார்கள், திருமூலரிடம் சரண் அடை கிறார்கள். தத்துவக் கருத்துக்களை விவாதிக்கிறார்கள். சித்தர்கள் யோக நிலை பற்றி எழுதியுள்ளதை அனுபவரீதி யாக எடுத்துச் சொல்லுகிறார்கள். குண்டலினியை எழுப்ப தியானம் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அதுமேல் எழுந்து உயர்ந்து நிற்கும். அது தான் ஞான நிலை என்று பேசுவார்கள். மற்றும் சிலர் எப்படியோ வாழ்ந்து முடித்தோம். தப்பித்தோம்; பிழைத்தோம் என்று பெருமூச்சு விட்டுப் பிறவாமை வேண்டும் என்று பிர லாபிக்கிறார்கள்.

இவர்கள் எல்லாம் என் நினைவுக்கு வந்தனர். அங்கு வந்து அவர்கள் ஆர்வமாக வருவதும், கூடுவதும் மகிழ்ச்சி தரும் காட்சியாகக் கண்டிருக்கிறேன். பணி செய்த கைகள் அங்கு அணி செய்து கொண்டு செயலற்றுக் கிடந்தன. கைகள் துருதுருப்பு அடங்கிவிட்டன. இரவு பகல் என்று பாராமல் கோப்புகளில் மூழ்கி அவற்றை எப்படித் தள்ளு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/57&oldid=1113231" இலிருந்து மீள்விக்கப்பட்டது