உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197 அதில் முழுகி அங்கிருந்து தெய்வ மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தான்; அவனுக்கு ஒரு நம்பிக்கை 'அழியாத வாழ்வு கிடைக்கும். இறந்தவர்களை எழுப்ப முடியும் ' என்று மந்திரம் ஜெபித்துக் கொண்டிருந்தான். துரியன் இருக்கும் இடம் தேடித் தேடி அலைந்தனர்; அவன் தலை மட்டும் அவர்களுக்குத் தெரிந்தது. கரையில் நின்று அவனைக் கூவி அழைத்தனர்; அவன் வாவிவிட்டு வெளியே வரவில்லை; வீமன் குரல் கொடுத்துக் கூவி அழைத்தான். 'நீ கவுரவர் குலத்துக்கே இழுக்குத் தேடுகிறாய்; உயிர் வேண்டுமென்றால் இரந்து கேள்: மறைந்து வாழதே உனக்கு ஒரு வாய்ப்பு தனி ஒருவனாக நீ என்னுடன் போர் செய்க.