உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 வானுலக வீதியிலே சுற்றி, தேவர் தம் வடிவழகைக் கண்டு கூறி வருபவரே கவிஞர். அஃதே கலை என்றிருந்த நிலை மாறி, கவி நம்முடனேயே இருப்பார். நமது உலகில்தான் உலவுவார். நாம் காண்பனவற்றையே காண்பார். ஆளுல் அவைகளைப் பற்றி நாம் கூறத் தயங்குவோம். இயலாததால் அவர் கூறுவார். அறிவுத் தெளிவால், கலைத்திறனுல் இந்தப் புரட்சியைச் செய்தார் பாரதிதாசன். புரட்சித்துறையில் ஈடுபட்டவர்கள் பெரிதும் துவக்கத் தில் பூவால் அர்ச்சிக்கப்படுவதில்லை. புன் மொழிகளையே வீசப் பெறுவார். அதிலும் மொழி வீசும் துறையில்ே ஈடுபட்ட புலவர்கள் உலகிலே புத்தம் புதிய புர்ட்சியை ஒருவர் வெற்றிகரமாகச் செய்து வருவது கண்டால், பொச்சரிப்பின் விளைவாகப் பொன்மொழி, மாரி போல் பொழியத்தானே செய்யும்? பாரதிதாசன் இந்த மாரியைச் சட்டை செய்யவில்லை. புரட்சியில் ஈடுபட்டுள்ளவருக்கு இதற்கு நேரம் ஏது? போரிட்டார், போரிட்டார், போரிட்டுக் கொண்டே இருக்கிருர் வென்ருர், வெல்கிருர், வெற்றி பெற்றபடியே இருப்பார்! அவர் பெற்ற வெற்றிகளிலே ஒன்று அவருடைய கவிதைகளை இன்று மக்கள் அறிந்து கொண்டார்கள். புரிந்து கொண்டார்கள். ரசிக்கிரு.ர்கள். பயன் பெறு கிரு.ர்கள்: நாளைக்கு என்ன நடக்கும் என்பதை எண்ணும்போது தான் புரட்சிக் கவிஞரே பாரதிதாசன், ஐயமில்லை' என்று அனைவரும் கூறமுடிகிறது. அவர் போர் முகாம் அமைத்து விட்டார். போர் வீரர்களைக் கூட்டி விட்டார், படைக்கலங்களும் தயார். முரசும் கொட்டி விட்டுக் கூப்பிடுகிருர், கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே”