உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 எனவே அப்படிப்பட்ட கருத்தாழமிக்க பேச்சும், கவிதைகளும் தமிழ் இனத்தைத் தட்டி எழுப்பியிருக்கிறது என்பது வரலாற்று உண்மை. அப்படிப்பட்ட வரலாற்று உண்மையை உருவாக்கிக் காட்டிய, பெருமைக்குரியவர்களில் ஒருவர்தான் மறைந்தும் மறையாமல் நம்முடைய மனதில் நிறைந்திருக்கின்ற புரட்சிக் கவிஞர்-பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள். அவர்களுடைய இந்த எழுச்சிமிக்க விழாவில் நம்முடைய கவிஞர் பெருமக்களெல்லாம் மூன்று தலைப்புக்களில் தந்தை பெரியார் தமிழருக்கு என்று தொடங்கி உயிர் போன்ருர்' *தாய் போன்ருர் பயிர் போன்ருர் என்ற தலைப்புக்களில் மிகச் சிறப்பான கவிதைகளை இங்கே யாத்துத் தந்தார்கள். எனினும் நண்பர் குடியரசு போன்ற கவிஞர்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன், நம்முடைய எண்ணங்களை மக்களுடைய உள்ளத்திலே பதிய வைக்க நாம் முற்படுகிற நேரத்தில் அது அனைவரையும் பண் படுத்தக் கூடிய வகையிலே அது அமைந்திட வேண்டுமே யல்லாமல் யாரையும் புண்படுத்தக் கூடிய வகையில்ே அமைந்திடக் கூடாது என்பதை மாத்திரம் நான் இங்கே தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன். கடுமை இருக்கலாம் கண்ணியக் குறைவு கூடாது ! நம்முடைய எழுத்தில்-கவிதையில் கடுமை, இருக் கலாம்-காரசாரம் இருக்கலாம், ஆனால் பெரியாரும் பேரறிஞர் அண்ணுவும் எடுத்துக் காட்டியதைப் போல் கடுகளவு கண்ணியக் குறைவும் இருக்கக் கூடாது என்பதை நான் உரிமையோடு எடுத்துக் காட்டக் கடமைப்பட்டு இருக்கின்றேன். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எவ்வளவோ கடுமை யான வார்த்தைகளை எல்லாம் தன்னுடைய கவிதைகளிலே இணைத்துப் பாடியிருக்கின்றர். நான் அடிக்கடி சொல்வ