உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

மனவலிமைவியிழந்து காணப்படுகின்றார்கள்? அறியாமையும் அதனடியாகப் பிறக்கும் அச்சமும், பொய்மையும் நம் நாட்டு மக்களினத்துள் எவ்வாறு புகுந்தன? ஆரியத்தை இன்றையத் தமிழர்கள் வெறுக்கின்றனர். அதற்குப் படுகுழிதோண்டிப் புதைக்க வீறுகொண்டு எழுந்துள்ளனர். ஏன்? அறியாமையும், அச்சத்தையும், பொய்மையையும் ஆரியமே படைத்தது என்பதில் கருத்து வேற்றுமையிருப்பினும் ஆரியம்தான் அம்மூன்றையும் நாட்டில் வளர்த்துக் கொண்டும் பரப்பிக் கொண்டும் வந்தது வருகின்றது என்பதில்கருத்து வேற்றுமையுண்டோ? நம் நாட்டில் இன்று காணப்படும் கோயில்கள் நமக்கு எவற்றை நினைப்பூட்டுகின்றன. வானளாவிய கோபுரங்கள் தமிழரின் பெருமை வானளாவ உயர்ந்திருந்த தன்மையை தோற்றுவிப்பது உண்மையா? நம் நாட்டில் அச்சம் எவ்வளவு ஆழமாகவும் எவ்வளவு பரந்தும் உயர்ந்தும் அழகோடு குடிகொண்டுள்ளது என்பதனைக் காட்டுவது உண்மையா? கோவில்களும் பேய் பிசாசுகளும் சகுனமும் இராகு காலமும் இவற்றிற்கு மேலாக விதியும், இவை போன்ற பிறவும் மக்களினத்தின் அச்சத்தின் சின்னங்கள் அன்றோ? இந்நாட்டில் ஒரு குழந்தைச் சுற்றுப்புறமாய் அமையவும் தாயும் தந்தையும் ஆசிரியரும் நண்பரும்,அரசாங்கத்தாரும் அவர்தம் துணையால் செய்தியாளர்களும் வானொலியார்களும் அஞ்சத் தகுவனவற்றை இடைவிடாது புகுத்தி வளர்த்துக் காப்பாற்றி

இ.-2