உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

பொருள்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று உருவத்தில் வேறுபட்டு விளங்கும் இயற்கையை மனதிலெண்ணி, உள்ளெண்ணங்கள் ஒன்றுக் கொன்று வேறுபடுவதையும் மனதிலெண்ணினால் உள்ளத்தைப் பற்றுகின்ற கிளர்ச்சியும் உள்ளத்தின் இயல்பிற்கேற்ப வேறுபட்டு விளைவதையே காண்கின்றோம், கேட்கின்றோம். இந்நிலையில் எல்லோரும் ஒரே தன்மைத்தான இன்ப உலகத்தை எய்தலாம் என்பது நம் உலக இயற்கைக்கு எவ்வளவு மாறுபட்டது என்பதனைத் தோழர்கள் எண்ணிப் பார்த்திடுக. நிற்க, இயக்கத்தினால் மனதில் உண்டாகும் கிளர்ச்சிக்கு இடமாக விளங்கும் ஒரே பொது இயல்பை வரையறுத்துக் கூறுதல் இயலுவதே ஆகும்.

இன்பத்தின் இயல்பை இன்னது என வரையறுப்பதின் முன்னர் எத்தகையோருக்கு இன்பம் உண்டு எனக் காணல் இக்கட்டுரைக்கு நலம் பயப்பதாகும். இன்பம் நுகர்பவனுக்கு எத்தகைய தகுதி வேண்டும்? மக்கள் உருவொடு காணப்படும் தகுதி ஒன்றே மக்கள் இன்பத்தைத் துய்க்கப் போதுமானதாகாது. இன்பமாகிய கிளர்ச்சி அல்லது உணர்ச்சித் தோன்றுவதற்கு இன்றியமையாது வேண்டப்படும் தகுதி வலிமைஒன்றேதான், ஆம். வலிமையே! என்ன வலிமை? வலிமை என்னும்போது மன வலிமை, உடல் வலிமை, பொருள் வலிமை, ஆள் வலிமை எனப் பற்பல நினைவிற்கு வரல் இயல்பு. இவை யத்தனையும் உள்ளிட்டி ஒன்றைத்தான்