உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

கருதுவது இயல்பு. அதனால், உயிர்கட்கு இன்பம் உடன்பாட்டுணர் வாயிருத்தல் ஆகாதென்பது மருட்சி. தேய்ந்து மறைவதும் திரும்பி வளர்வதும் மதி ஒளி இயல்பு. அதுபோல் மகிழ்வின் தன்மை மாறுவது இயல்பு. என்றும் ஒன்றுபோல் நின்று திகழ்வதால் ஞாயிற்றின் ஒளியை இருளும் ஒளியும் இறந்த வெறுநிலை என்பார் உளரோ அதுவே போல், மாறும் மகிழ்வினும் மாறா இன்பம் விரும்பத்தக்கது. இன்பமும் பகல்போல் உயிர்கள் விரும்பும் உடன்பாட்டுணர்வே என்பது தமிழர் மரபு

திராவிட நாடு
15-4-1945