பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

நபிகள் நாயகம் இஸ்லாமிய மார்க்கத்தை நிலைபெறச் செய்வதற்கு முன்பு மூன்று வகையான ஆண்டுகளை அரபிகள் கடைப்பிடித்து வந்தனர் என்பதை முன்பே பார்த்தோம். அவை ‘அனுமதி ஆண்டு’. ‘நில அசைவு ஆண்டு ‘, ‘யானை ஆண்டு’ என வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தன. இவை ஒவ்வொன்றும் அரபி களின் சமுதாய வாழ்வில்-வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்ச்சி ஒன்றை அடிப்படையாகக் கொண்டே அழைக்கப்பட்டு வந்தன. சான்றாக, அப்ரஹா, என்பவன் மக்காவிலுள்ள புனிதத் தலமான கஃபா வை இடித்துத் தள்ள பெரும் யானைப் படையுடன் வந்தான். படை கஃபாவை நோக்கி விரைந்து வரும்போது இறையருளால் அபாபீல் எனும் பறவைகள் பெரும் எண்ணிக்கையில் சிறு சிறு கற்களைப் பொழிந்து அவனையும் அவன் படைகளையும் தாக்க அனைவரும் மடிந்தனர். கஃபா காப்பாற்றப்பட்டது. இச்சம்பவத்தைக் குறிக்கும் வகையிலேயே ‘யானை ஆண்டு’ அமைந்தது. இம் மூன்று வகை ஆண்டுகள் புழக்கத்தில் நிலவி வந்த போதிலும் எதுவும் அரபிகளின் வாழ்வில் நிலைபெறாமலே இருந்து வந்தன. இதனால் ஆண்டுக் குழப்பமும் இருந்தே வந்தது.

இஸ்லாம் நிலை பெற்ற பிறகு தங்களுக்கென புத்தாண்டு ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டிய அவசர, அவசியத் தேவை ஏற்பட்டது.

எனவே, ஒரு ஆண்டு முறையை உருவாக்கி உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து தன் சகாக் களுடன் ஆலோசனை செய்தார் இரண்டாவது கலீஃபா உமர் (ரலி) அவர்கள். சிலர் பாரசீக ஆண்டு முறையைப் பின்பற்றலாம் என்றனர். இன்னும் சிலர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டு முறை வகுக்கலாம் என்றனர். அண்ணல் நபியின் மருகர் அலீ (ரலி)