பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92



அன்றைய வளர்ச்சியின் இன்றைய பரிமாணம்

அன்று அழிவிலிருந்து தமிழைக் காத்து, தரமான இலக்கியப் படைப்புகளினால் உரமூட்டிய இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களின் தொண்டின் தொடர்ச்சியாகத்தான் புதுக்கவிதை வளர்ச்சிக்கு வழிகாட்டிகளான கவிக்கோ அப்துல் ரகுமான், மு. முஹம்மது மேத்தா போன்றவர்களின் பணியும் அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு முனைப்புப் பணியாற்றி வரும் என் பணியும். என் உழைப்பிற்கு - முயற்சிகளுக்கு - உறுதுணையாயிருக்க பலரும் முன் வருகிறார்கள். காஞ்சி காமகோடி பீடம், முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு சங்கர் தயாள் சர்மா அவர்களைக் கொண்டு “சேவாரத்னா" விருதும் பரிசும் பாராட்டும் வழங்கி மகிழ்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம், தமிழை அறிவியல் மொழியாக இருபத்தொராம் நூற்றாண்டுக்குரிய மொழியாக தமிழை வளர்த்தெடுக்கும் என் முயற்சிக்குக் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும்தான்.

பெரும்பான்மையினரை விஞ்சும்
சிறுபான்மையர் பணி

இதிலிருந்து நாம் ஒரு உண்மையை உணர்ந்து தெளிய வேண்டும். பெரும்பான்மை சமயத்தவர் மத்தியில் சிறுபான்மையினராக வாழ நேர்ந்துள்ள நாம் ஆற்றும் அரும்பணிகள் பெரும்பான்மையினரின் பணியையும் விஞ்சும் அளவில் அமைவது அவசியம். இச்செயற்பாடுகள் - அரும்பணிகள் மூலம் பெரும்பான்மையினருக்கு இணையாக மட்டுமல்ல மேலான நிலையிலும் சிறுபான்மையினர் திகழ முடியும்.

இன்று இந்தியாவில் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த விண்ணியல் வல்லுநர் விஞ்ஞானி அப்துல் கலாம் இந்திய ஏவுகணையியல் துறையின் பிதாமகராகத் திகழ்கிறார். ‘பாரத ரத்னா' அப்துல் கலாமின் சாதனைப் பணி இஸ்லாமியச் சமுதாயத்தின் சாதனையாகவே