உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

241


களில்லை. அவர்களின் சிந்தனையும் செயலும் ஆட்சி செலுத்துவதோடு சரி. இஸ்லாத்தைப் பொருத்தவரை மன்னர்கள் முஸ்லிம்கள் என்பதைத் தவிர வேறு எந்தச் சிறப்பும் இல்லை.

ஆனால் இஸ்லாத்தை இந்திய மக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள் இஸ்லாமிய சூஃபிகளும் இறைநேசச் செல்வர்களாகிய வலிமார்களுமேயாவர். அத்தகையவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் குவாஜா மொய்னுதீன் (ஆஜ்மீர்), நிஜாமுத்தீன் (டெல்லி), நத்தர்ஷா (திருச்சி) ஷாஹ-ல் ஹமீது ஆண்டகை (நாகூர்), இபுறாஹீம் ஷஹீது ஒலியுல்லாஹ் (ஏர்வாடி) ஷேக் தாவூத் ஒலியுல்லாஹ் (முத்துப் பேட்டை) சதக்கத்துல்லா அப்பா போன்ற பெரியோர்களாவர்.

இருபால் மெய்ஞ்ஞானியர் தொண்டு

அவ்வாறே சூஃபிமார்களும் சூஃபிக் கவிஞர்களும் அவ்வப் பகுதிகளில் வழங்கிய அவ்வம் மொழிகள் வாயிலாக இஸ்லாமியக் கருத்துகளையும் சிந்தனைகளையும் சிந்தைகொள் மொழியில் எடுத்தியம்பினர். தமிழைப் பொருத்தவரை ஐம்பதுக்கு மேற்பட்ட இஸ்லாமிய மெய்ஞ்ஞானிகளாகிய சூஃபிக் கவிஞர்கள் நூற்றுக் கணக்கான இஸ்லாமிய ஞானப்படங்களை எழுதிக் குவித்துள்ளனர். இவர்களுள் தக்கலையின் மிக்க புகழ் பீர் முஹம்மது அப்பா அவர்கள் பத்தாயிரம் இஸ்லாமிய ஞானப் பாடல்களைப் பாடியுள்ளார். குணங்குடி மஸ்தான் நாடறிந்த மெய்ஞ்ஞானத் தமிழ்க் கவிஞராவார். இவர்களுள் சில பெண் சூஃபிக் கவிஞர்களும் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள் என்பது வியப்பூட்டும் செய்தியாகும். தென் காசி ரசூல் பீவி, இளையான்குடி கச்சிப் பிள்ளையம்மாள், கீழ்க்கரை செய்யது ஆசியா உம்மா (மேல் வீட்டம்மா) ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்களாவர்.