பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

axenic

168

axon


சிரைக்கு இந்த அலைக் கடத்தப்படுகிறது. மூவிதழ்த் தடுக்கிதழ்க் குறுக்கம், நுரையீரல் தமனித் தடுக்கிதழ்க் குறுக்கம், நுரையீரல் தமனி மிகு இரத்த அழுத்தம் ஆகிய நோய் நிலைகளில் இந்த அலை பெரிதாகத் தெரியும்.

axenic : நோய் நுண்மமின்மை; சுகாதாரமான நோயற்ற : கிருமி வளர்ப்புச் சோதனையில் கிருமி இனப்பெருக்கமில்லா நிலைமை.

axerophthol : ஆக்செராஃப்தால் : வைட்டமின் A ஊட்டச் சத்து.

axialis : அச்சு போன்ற; அச்சமைப்பு : உடலின் நடுவில் அமைந்துள்ள, உடலுறுப்பின் நடுவில் அமைந்தள்ள.

axiation : அச்சு வளர்ச்சி; முளை வளர்ச்சி : அணுக்களின் அச்சுப் பகுதி வளர்ச்சியடைதல் கருவணு மற்றும் கருவில் முனைப் பகுதி வளர்ச்சி அடைதல்.

axilla : அக்குள்; கக்கம்; கமுக் கூடு:

axilary : அக்குளுக்குரிய : அக்குளின் நரம்புகள், இரத்தம், ஊனிர் நாளங்கள் ஆகியவை தொடர்புடைய.

axipetal : அச்சுநோக்கி; மையம் நோக்கி : அச்சுப்பகுதி அல்லது மையப்பகுதியை நோக்கி இருத்தல்,பகுதி.

axis : நடுஊடுவரை (நடுக்கோடு); அச்சு : விழிநோக்கின் மைவரை, உடலுறுப்புகளின் நடு ஊடு வரை (நடுக்கோடு).

axo-axonic : இடைநரம்பு வேரிழை : இரண்டு நரம்பு வேர் இழை களுக்கு இடைப்பட்ட இடத்தில் காணப்படும் தொடர்பு.

axodendritic : நரம்பு வேரிழை உணர்விழை : நரம்பு வேர் இழைக்கும் நரம்பு உணர்விழைக்கும் இடையில் உள்ள தொடர்பு நிலை.

axolemma : நரம்பிழை மேலுறை : நரம்பு வேரிழையை முடியுள்ள மேலுறை.

axolysis : நரம்பு வேரிழைச் சிதைவு; நரம்பு வேரிழைக் கழிவு : நரம்பணுவில் உள்ள நரம்பு வேரிழையானது சிதைந்து அழிந்து போகும் நிலைமை.

axon : நரம்பணுவால்; நரம்பு வேர் இழை; நீள்நரம்பு : நரம்பணுவின் வால் பகுதி. ஓர் உறுப்பில் நரம்பு

நரம்பணு வால்