பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

299

நாயகத் திருமேனியையும் அவர்தம் கருத்துரைகளையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் நறுக்குத் தெரித்தாற் போலச் சொல்லப்படுகிறது. அதன் மூலம் இஸ்லாத்தின் அடிப்படை பண்புகளைத் தெளிவாக அறிந்துணர முடிகிறது என்றும் கூறியதோடு, இதை நான்காவது முறையாகத் தன் குடும்பத்தாரோடு பார்க்க வந்திருப்பதாக விளக்கிக் கூறியதைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்து போனேன். உள்ளே சென்று பார்த்தபோதுதான் அந்த அமெரிக்க அன்பர் கூறியது எவ்வளவு பெரிய உண்மை என்பது புலப்பட்டது.

இஸ்லாத்தைப் பற்றி அதிகம் தெரியாத அமெரிக்க மக்களுக்கு ஒலி - ஒளிக் காட்சியாக காஃபாவை அமைத்து, மக்கள் ‘தவாப்' செய்வதுபோல் மனித உருப் பொம்மை களை நகரச் செய்து, கணிரென்ற, அதே சமயம் பவ்வியமான குரலில் 'ஓர் இறை' த் தத்துவத்தையும் அண்ணலாரின் போதனைகளையும் சிந்தைகொள் மொழியில் சொல்லு வதைக்கேட்கும்போது, இஸ்லாத்தின் மீது ஈர்ப்புக் கொள்வது இயல்பானதொன்றாக அமைந்துவிடுகிறது. சொல்ல வேண்டிய செய்தியை சொல்ல வேண்டிய முறையில் சொன்னால் எதுவுமே எடுபடும் என்பது எவ்வளவு பெரிய நிதர்சன உண்மை என்பது அப்போது புரிந்தது.

வெற்றிக்கான உத்தி

சாதாரணமாக மஞ்சி விரட்டு என்று அழைக்கப்படும் மாடுபிடி விளையாட்டில் ஜல்லிக்கட்டில் மாடு பிடிப்போர் ஓர் உத்தியைக் கையாள்வர். எவ்வளவு முரட்டுக் காளையானாலும் அதை அடக்க முயல்பவர் எடுத்த எடுப்பில் மாட்டின் கொம்பைப் பிடித்து நிறுத்த முயற்சிக்க மாட்டார். அவ்வாறு செய்தால் அவரை முட்டித் தூக்கி எறிந்து விடும் என்பது அவருக்கு மிக நன்றாகத் தெரியும். எனவே, அவர் ஜல்லிக்கட்டு மாட்டுடன் தொடர்ந்து சிறிது நேரம் ஓடுவார். பின் முதுகுத் திமிலின்மீது கை வைத்து வளைத்து இறுகப்