transiliumination
1101
transplant
transillumination : ஒளிபாய்ச்சுதல்; ஒளி ஊடுருவல்; ஒளிபுகல்; ஊடு ஒளியூட்டம் : நோயினைக் கண்டறியும் நோக்கத்திற்காகப் பீனிசத்தினுள் ஒளியைப் பாய்ச்சுதல்.
translocation : புடைபெயர்வு; நிலைப்பெயர்வு : ஒரு நிறக் கோலிலுள்ள ஒரு பகுதியை அதே நிற்க்கோலின் வேறொரு பகுதிக்கு மாற்றுதல்.
translucent : அரை ஒளி ஊடுருவல்; ஒளிக்கசிவு : ஒளிக்கதிர் ஊடுருவி, உருக்காட்சி கடக்க விடாதிருக்கும் நிலை.
translumbar : முதுகெலும்பு வழி : முதுகெலும்புப் பகுதி வழியே. பெருந்தமனியைப் படமெடுப்பதற்கு முன்பு பெருந்தமனிக்குள் ஊசிமருந்து செலுத்துவதற்கான வழி.
transmembrane protein : படல ஊடு புரதம் : குருதி நீர்ப்படலத்துடன் முழுவதுமாக ஒன்றிணைந்த புரதம்.
transmethylation : மேத்திலேற்றம் : அமினோ அமிலங்களின் வளர்சிதை மாற்றத்தில் ஒரு செய்முறை. இதில் ஒரு மெத்தில் ஒரு கூட்டுப் பொருளிலிருந்து இன்னொரு கூட்டுப் பொருளாக மாற்றப்படுகிறது.
transmigration : உயிரணு இடம் பெயர்வு : ஒரு சவ்வுப்படலத் தைக்கடந்து குறுக்கே ஒர் உயிரணு நாளத்தின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு மாறுதல்.
transmission : அனுப்புதல் : தொற்று மூலம் அல்லது தேக்கத்திலிருந்து, தொற்று நோய்களில், ஒரு வாய்ப்பான ஏற்பிக்கு அனுப்புதல்.
transmissible : அனுப்பத்தக்க : ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றப்படும் தன்மை கொண்ட.
transmural : நாளச்சுவர் வழியே : ஒரு நீர்க்கட்டி உறுப்பு அல்லது நாளத்தின் சுவரின் வழியே.
transmutation : உயிர்வகை மாற்றம்; படிநிலை மாற்றம் : உயிரின் வகை மாற்றம்.
transnasal : மூக்கு வழியே.
transperitoneal : உதரப்பை வழியே.
transplacental : நச்சுக்கொடியூடு : நச்சுக் கொடியின் ஊடாக.
transplant : உறுப்புமாற்றம் : அறுவை மருத்துவம் மூலம் உயிர்த்தசை இழைமத்தை ஒருவர் உடலிலிருந்து எடுத்து இன்னொருவர் உடலில் பொருத்துதல்.