பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 • பரிபாடல் மூலமும் உரையும் சொற்பொருள் : பூவை - காயா. இரு நிழல் இருவகை ஆட்சி, ஏமம் - காவல்; அனைத்தையும் காப்பவன் அவனன்றிப் பிறரில்லை என்பதாம். - r - சொல்லும் சிப்பினை! பாழெனக் காலெனப் பாகென ஒன்றென இரண்டென மூன்றென நான்கென ஐந்தென - ஆறென ஏழென எட்டெனத் தொண்டென நால்வகை ஊழி.எண் நவிற்றும் சிறப்பினை 80 பாழ்' என்னும் சூனியமாக நிற்பவனும் நீ நிலம் நீர் தீ காற்று வான் எனப்படும் ஐந்து பெரும் பூதங்களும் நீ! வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் என்னும் ஐந்து கன் மேந்திரியங் களும் நீ ஒசையும் ஊறும் ஒளியும் சுவையும் நாற்றமும் ஆகிய ஐம் புலன்களும் நீ மெய் வாய் கண் முக்கு செவி மனம் எனும் ஆறு ஞானேந்திரியங்களும் நீ ஏழாக வகுக்கப்படும் தாதுக்களும் நீ! எட்டாகக் கூறப்படும் திக்குக்களும் நீ! ஒன்பதாக விளங்கும் கோள்களும் நீ! இவ்வாறு எண்ணப்பட்ட பலவாகவும் விளங்கி நால்வகை ஊழிகளினும் ஆராய்ந்து, சான்றோராற் கூறப்படும் சிறப்பினை உடையவனும் நீயே! r சொற்பொருள் : பாழ் - ஏதுமற்றது: சூனியம் கால் முளை. பாகு பகுத்து அறியப்படுவது. நால்வகை ஊழி - கிருத, திரேதா, துவாபர, கலி என்னும் யுகங்கள். ஒன்று முதலான எண்கள் தத்துவப் பொருளாக அமைந்த உலக நிகழ்வைக் குறிப்பன. தொண்டு - ஒன்பது. r - - விளக்கம் : முப்பாழும் பாழாய் முடிவிலொரு சூனியமாய் விளங்கும் அப்பழம்பெரும் நிலைக்கும், அதனின்றும் தோன்றிப் பரந்த உலக நிலைக்கும் ஆதியாக விளங்குபவன் திருமாலே என்பதாம். - துதிகள்! செங்கண் காரி: கருங்கண் வெள்ளை! பொன்கண் பச்சை பைங்கண் மாஅல்! இடவல குடவல! கோவல. காவல! கானா மரப! நீயா நினைவ! - மாயா மன்ன! உலகாள் மன்னவ! . 85. தொல்லியற் புலவ! நல்லியாழ்ப் பாண! மாலைச் செல்வ! தோலாக் கோட்ட பொலம்புரி ஆடை வலம்புரி வண்ண! பருதி வலவ! பொருதிறல் மல்ல! . - திருவின் கணவ! பெருவிறல் மள்ள! 90