பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 0 கிராம்ப் புறப் பாட்டாளிகளை நோக்கி

அவைகளினால் ஏற்பட்ட துயர்களை தணிக்கவும் துடைக்க வும்சமுதாய முயற்சிகள் மூலம் பல கடமைகள் நிறை வேற் றப்பட்டு வந்துள்ளன.

ஆறுகளில் வரும் பெரு வெள்ளங்கள் கால் வாய்கள் ஏரிகள் மூலம் திசை திருப்பப் பட்டிருக்கின்றன. உபரி உற்பத்தி சேமிக்கப்பட்டு பஞ்ச காலத்திற்கு உதவப்பட்டிருக்கிறது. இயற்கைச் சீற்றங்களின் போது பாதுகாப்பிற்காக ஏராள மான பல கற்கோயில் கட்டப்பட்டிருக்கின்றன.

நமது நாட்டின் முதல் நிலை உற்பத்தியிலும் சரி கிராமத் தொழில் உற்பத்தியிலும் சரி உபரிக்குக் குறைவில்லை; அந்தஉபரி மூலம் தான் நமது நாட்டின் அறிவுச் செல்வமும். கலைச் செல்வமும் வளர்க்கப் பட்டிருக்கின்றன.

மற்ற பல நாடுகளில் தங்கத்தைக் கட்டியாக்கி அரண் மனைகளில் சேமிக்கப்பட்டிருப்பதை அறிகிறோம். நமது நாட்டில் பொதுக் கோவில்களில், கோயில் விமானங்களில் கோபுரங்களின் உச்சியில் தங்கக் கலசங்களைக் காண் கிறோம்.

வற்றாத வளமும், குலையாத செல்வமும் நிறைந்த நாடாக பாரதம் இருப்பி னு ம் ஏழ்மையும் சமுதாயக் கொடுமைகளும் மறு பக்கம் இருந்தது. அறிவின் இமயத்திற்கும் சென்றுள்ளோம். அறியாமையின் அடியாழத்

திலும் வீழ்ந்து கிடக்கிறோம். அதனால்தான் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர் என்று பாரதி குறிப்பிட்டான்.

இருப்பினும் நமது வற்றாத வளமும் குறையாத செல் வமும் நமது நாட்டு மக்களின் -கிராமப்புறப் பாட்டாளி களின் உழைப்பால் தொடர்ந்து வளர்க்கப் பட்டே வந்திருக்கிறது. ஆயினும், ஐரோப்பியர் வருகையும் ஆங்கிலேயர் ஆட்சியும், சில புதிய ஐரோப்பிய நாகரிகத்தையும் உற்பத்தி முறையையும் கொண்டு வந்த போதிலும் அவர்களின் ஆட்சியும் கொடுமையும் கொள்ளையும் பாரதத்தை மிகப் பெரும் அளவில் சேதப்படுத்தியிருக்கின்றன.

அந்நிய ஆட்சியின் விளைவுகள் ஆழ்ந்த பரிசீலனைக் குரியதாகும். அதிலிருந்து நாம் செய்ய வேண்டிய மீட்சிப் பணி இன்னும் தொடருகிறது.