பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

239


பாசிச் செல்லாது, ஊசித் துன்னாது, - அளக்கர்த்திணை விளக்காக, 10

கனைளி பரப்பக், கால்எதிர்பு பொங்கி, ஒருமீன் வீழ்ந்தன்றால், விசும்பி னானே அதுகண்டு, யாமும் பிறரும் பல்வேறு இரவலர், 'பறைஇசை அருவி நல்நாட்டுப் பொருநன் f நோயிலன் ஆயின் நன்றுமன் தில்லென, 15 அழிந்த நெஞ்சம் மடியுளம் பரப்ப, அஞ்சினம்; எழுநாள் வந்தன்று, இன்றே; மைந்துடை யானை கைவைத்து உறங்கவும், திண்பிணி முரசம் கண்கிழிந்து உருளவும், காவல் வெண்குடை கால்பரிந்து உலறவும், 20

கால்இயல் கலிமாக் கதி இன்றி வைகவும், மேலோர் உலகம் எய்தினன் ஆகலின், ஒண்தொடி மகளிர்க்கு உறுதுணை ஆகித், தன்துணை ஆயம் மறந்தனன் கொல்லோ - பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல், நசைவர்க்கு - 25 அளந்து கொடை அறியா ஈகை, - மணிவரை அன்ன மாஅயோனே?

வானத்திலே இருந்து ஒர் எரிநட்சத்திரம் கீழ்நோக்கி வீழ்ந்தது கண்ட யாமும், பிற இரவலரும், 'எம் வேந்தன் நோயுடையவனாகாது இருந்தானாயின் நன்று’ என உள்ளங் கலங்கி அச்சங் கொண்டோம். அவ்வாறு யாங்கள் அஞ்சிய ஏழாவது நாளிலே, அவன் வாழ்நாளும் முடிந்தது. பகைவரைப் பிணித்து வெற்றி கொள்ளும் வளமிகுந்த மலை நாட்டு வேந்தன்; விரும்பி வந்தவர்க்கு அளந்து கொடுத்தலையும் அறியாது வழங்கும் வண்மையன், எம்மைத்தான் மறந்தான்; தனக்குத் துணை யாகிய காதன் மகளிரையும் மறந்து சென்றுவிட்டனன் போலும்! சொற்பொருள்: 1. ஆடு மேடராசி, அழல் குட்டத்து - கார்த்திகை நாளின் முதற்காலின் கண். 3. முடப்பனையத்து - முடப்பனை போலும் வடிவுடைய அனுட நாளில். 5. உயர் அழுவத்து - முதற் பதினைந்தின் கண். 6. தலை நாண்மீன் - உச்சமாகிய உத்தரம். 7. நிலைநாண்மீன் - அதற்கு எட்டாம் மீனாகிய மூலம் 8. தொன்னாண்மீன் - அந்த உத்தரத்திற்கு முன் சொல்லப்பட்ட எட்டாம் மீனாகிய மிருகசீரிடமாகிய நாண் மீன். பாசி-கீழ்த்திசை ஊசி வடதிசை10. அளக்கர்த் திண்ை - கடலாற் சூழப்பட்டபூமி,