பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

465


(282) இவனது செய்யுள், அரசர்க்கும் படை மறவர்க்கும் இடையே நிலவிய அன்புணர்வை விளக்குவதாகும். -

சேரமான் பெருஞ்சேரலாதன் - 65, 66

இவன் சோழன் கரிகாற் பெருவளத்தான் காலத்தவன் என்று கூறப்படுகின்றது. அவனோடு போரிட்டுக் களத்திலே புறப்புண் பட்டதற்கு நாணங்கொண்டு வடக்கிருந்து உயிர் நீத்த செம்மையாளன் இவன். இவனுடைய இந் நிலையைக் கண்டு உள்ளம் நடுக்குற்ற கழாஅத்தலையாரின் இச் செய்யுள் இவனது பண்பு மேம்பாட்டையும், புகழ்சால் மற மேம்பாட்டையும் நிலைநிறுத்துவதாகும். இவரே சேரமான் குடக்கோ நெடுஞ்சேர லாதனும், சோழன் வேற்பஃறடக்கை பெருநற்கிள்ளியும் போர்ப் புறத்துப் பொருது வீழ்ந்தனர் எனப் பாடுகின்றனர். ஆகவே, அவர்கள் காலத்தை ஒட்டியவன் இவனும் ஆகலாம். புறநானூற்று 288 ஆவது செய்யுளுள், 'ஆரமர் மயங்கிய ஞாட்பில், தெறுவர நெடுவேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து’ எனக் கழா அத்தலையார் குறிப்பிடுவது இவனையே எனலாம். வெண்ணிக் குயத்தியாரின் புறப்பாட்டும் (66), இவன் புறப்புண் நாணி வடக்கிருந்து மிகப் புகழ் உலகம் எய்தினான்’ என்று கூறும். சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் - 2

இவன் பாரதப் பெரும் போரின்கண் இருதிறத்துப் பெரும் படைக்கும் உணவளித்துப் பெரும்புகழ் பெற்றவன். இச் சிறப்பைச் சிலம்பு, "ஓரைவர் ஈரைம் பதின்மர் உடன்றெழுந்த போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன்’ என்று கூறும். இவனைப் பாடியவர் முரஞ்சியூர் முடிநாகராயர். சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை - 12, 20, 22, 53, 125, 229

கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்னும் தலைப்பைக் காண்க. இவனைப் பாடியோர் குறுங்கோழியூர் கிழார், கடலூர் கிழார், பொருந்தில் இளங்கீரனார் என்னும் சான்றோர் ஆவர். 'பலர்மேந் தோன்றிய கவிகை வள்ளல், நிறையருந்தானை வெல்போர் மாந்தரன், பொறையன் கடுங்கோ எனப் பரணர் குறிப்பதும் இவனையே (அகம் 142) எனக் கொள்வர். ஆகவே, இவனை இரும்பொறை மரபினன் எனக் கொள்ளலாம். .

சேரமான் மாரி வெண்கோ - 367

இவனைப் பாடியவர் ஒளவையார். இவன் தன் காலத்தவரான பாண்டியன் கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியுடனும்,சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளி