இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நிலவு
எண்சீர்விருத்தம்
1
ஒளிமிகுந்த குளிர் நிலவே! உன்னைக் கண்டேன்
- உள்ளமெல்லாம் உவகையுற இன்பங் கொண்டேன்;
களிமிகுந்த காதலருக் கின்பத் தோணி!
- கடைந்தெடுத்த வெண்முத்தம் நின்றன் மேனி;
தளிர்போலும் குழவிகளின் கதறல் நீக்கும்
- தாயர் தமக் குதவிடுவாய்! உலகைக் காக்கும்
எளிமைமிகு தொழிலாளர் அயர்ந்த போது
- எழுந்துமுகம் காட்டிமகிழ் வூட்டும் மாது!
2
ஒருபொழுதும் வயிறர உண்ணல் காண
- துயிர்நிற்க இரந்துண்னும் ஏழை திங்கள்
வருபொழுது அரைவயிறு மட்டும் உண்டு
- வருந்துகிற உழைப்பாளி, நிறைய உண்ணும்
பெருவயிற்றுப் பணக்காரன் யாவ ரேனும்
- பிழையாது நிலவளித்து மாட மீதும்
சிறுகுடிசை மீதுமொளி வீசி இன்பம்
- சேர்க்கின்ற பொதுவுடைமை ஆட்சி கண்டேன்
32