வள்ளவர் கோட்டம்●
47
● கவியரசர் முடியரசன்
வள்ளுவர் கோட்டம் 47 கவியரசர் முடியரசன்
-----------------------------------------------------------
காலமெலாந் துன்பங்கள் சூழ்ந்த போதும் கவலையிலா மனிதனென வாழ வேண்டும்; ஞாலமெலாம் ஆள்பவனே தீமை ஒன்றும் நண்ணாமல் வாழ்வெல்லாம் இயங்க வேண்டும்; மேலவனே! வழிபு:கல்வாய் என்றேன்; தம்பி! மேதினியில் அறநூல்கள் காட்டு கின்ற சிலநெறி செல்வோர்க்குக் கவலை யில்லை, சிறுமையில்லை என்றென்றுந் தீமை யில்லை.
'அறத்தைவிடச் சிறப்பளிக்கும் ஆக்கம் இல்லை அவ்வறத்தை மறப்பதைப்போற் கேடும் இல்லை அறத்தாலே வருவதொன்றே இன்பம் ஆகும் அ.தின்றேல் புகழில்லை பொருளும் இல்லை; அறச்செயலே செயற்பால தாத லாலே அச்செயலே எவ்வெவருஞ் செய்தல் வேண்டும்; மறச்செயலைத் தவிர்த்தறமே புரியும் மாந்தர் மனக்கவலை அற்றவராய் வாழ்வர் என்றான்.
'இன்னுங்கேள்! முகமலர்ந்தும் இனிது தேர்ந்தும் இளகுமனம் பொருந்திவரும் இனிய சொற்கள் பன்னுதலே அறமாகும்; பயனால் நன்மை பயக்கின்ற சொற்களைத்தன் மனத்தால் ஆய்ந்து கன்னலென இனியசொலின் தீமை தேய்ந்து கனிவுதரும் அறம்பெருகும்; மேலும் மாந்தன் தன்னுளத்து மாசகற்றித் தூய்மை செய்யத் தலைப்படுதல் நல்லறமாம் என்று சொன்னான்.