வள்ளவர் கோட்டம்●
25
● கவியரசர் முடியரசன்
வள்ளுவர் கோட்டம் 25 கவியரசர் முடியரசன் __ - __ இன்பமுதற் பைங்கழ்கள் என்னாட்டில் தோற்றுவித்து துன்பமெனும் வன்பசிதான் தோன்றாமல் செய்திடுவேன்; கொற்றஞ் செய்திருக்கக் கறும் பெரியாரைப் பற்றித் துணைக் கொள்வேன்; பாருக்குள் மேலாமென் நாட்டின் முதலமைச்சர் நன்காய்ந்த பேரறிஞர்; காட்டும் அவர்நெறியிற் காவல் புரிந்திருப்பேன்; பேரறிஞர் காட்டும் பெருநெறியை நன்மொழியை ஊரறியப் போற்றி உலகாண் டுயர்ந்திருப்பேன்; போற்றும் பெரியார் புகன்ற அறிவுரையைத் துற்றிப் பழிக்குந் தொழிலைப் புரிந்தறியேன், பண்பாட்டின் சின்னமெனப் பாரோர் புகழ்தேத்தும் தென்னாட்டின் பேரறிஞர் சீர்மை பழித்தறியேன், கறுங் குறள்நெறியிற் கொற்றம் நடத்துதலால் ஏறும் புகழ்பரவும் என்னாட்டில் ஆற்றல்மிகும் நல்ல கலைஞருக்கு நாளும் மதிப்பளிப்பேன்; சொல்லும் புகழ்மாலை சூட்டி வரவேற்பேன்; போற்றி ஒரு நாளும் தூற்றி மறுநாளும் சாற்றேன்; கலைஞருக்குத் தக்க பரிசளிப்பேன்; அஞ்சாத நாவலர்க்கும் அண்டிவரும் பாவலர்க்கும் எஞ்சாச் சிறப்பளிப்பேன் ஏற்றம் பெறவைப்பேன்; ஒன்றிப் பழகிடுவேன் உள்ளத்தில் எந்நாளும் நின்று நிலைபெறவே நீள நினைந்திருப்பேன்; நண்பர் புடைசூழ நாளும் மகிந்திருப்பேன்; பண்பிற் சிறந்த என் பட்டத் தரசியையும் விட்டுப் பிரிந்திருப்பேன் வேண்டியான் நண்பர்தமை