இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உலகத்தார் தாழ்த்தினும் வாழ்த்தினும் இப்பாவை தன் கருத்தினையே பாடுகிறாள்; அது அவள் இயல்பு.
இரண்டாம் முறையாக மீண்டும் உலா வருகிறாள் எழிலோடு புதிய பொலிவோடு. தமிழைப் புதிய முறையில் பாடி வருகிறாள் பாரதி கண்ணனைப் பாடிய பாணியைப்போல். அவள் குரலில் காதற் பாணியும் கேட்கும்; ஆடும் ஒலியும் ஆர்க்கும்; அறநெறி இசையும் கலக்கும். ஆடிப்பாடி அவளெழுப்பும் இசையில், அதனுள் பொதிந்து கிடக்கும் கருத்தில் தோய்ந்து தமிழகம் இன்பங் துய்ப்பதாக.
தமிழர்க்கு நல்ல நூல்களை வெளியிட்டு வரும் பாரி நிலையத்திற்கு உரியரும், இனிய எளிய என் கெழுதகை நண்பரும் ஆகிய திரு. செல்லப்பர் இக் காவியப் பாவையை விழைந்து மீண்டும் வெளிக் கொணர்ந்தனர். அந் நல்லப்பர்க்கு என் அன்பளாவிய நன்றி உரியதாகுக.
காரைக்குடி,
முடியரசன்
19-3-61.}
8