உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

51

 கவியரசர் முடியரசன்


வள்ளுவர் கோட்டம் ) 51 ைகவியரசர் முடியரசன் எத்திசையும் பேர்மணக்க ஏற்றமுடன் வீற்றிருந்தே ஆண்ட தமிழ்வேந்தர் ஆட்சியையுங் காணுங்கால் மீண்டும் பெருமிதமே மேலோங்கும்; அஃதன்றி மூவேந்தர் ஆண்டு முறைசெய்த இந்நாட்டைப் பாவேந்தர் பாடிவைத்த பாட்டெல்லாம் நாம்சுவைப்பின் நாவேந்திப் பாடுதற்கு நாள்போதா, ஆயினுமே தாழ்வேந்தும் இந்நாள் தமிழகத்தை நோக்குங்கால் வாளேந்தி வாழ்ந்தோர் வறுமைக் கிலக்காகித் தாளேந்தி இவ்வண்ணம் தாழ்வதுவோ என்று கவலை மிகவாகிக் கண்கணி சிந்த அவலச் சுவைநம்மை ஆட்டிப் படைத்துவிடும்; காட்டிக் கொடுக்குங் கயமைக் குணமிந்த நாட்டில் உலவிவரல் நமக்கெல்லாம் இளிவரலே; வாயின் சுவைக்கும் வயிற்றின் சுவைதனக்கும் நாயின் இழிந்து நலங்கெட்டு வாழ்பவரைக் கொள்கைப் பிடிப்பின்றிக் கோணற் சிறுமதியால் எள்ளுந் தொழிலால் இருப்போரைக் காணுங்கால் தோன்றும் நகைச்சுவையே; தோழர்களே நம்மைஎலாம் ஈன்றதிரு நாட்டுக்கும் இன்பத் தமிழ்மொழிக்கும் கேடு விளைக்கின்ற கிழோரைக் காணுங்கால் பாடுகின்ற பாடலிலும் பாயும் பெருவெகுளி, நாட்டின் நலம்மறந்து நாளுந்தமைநினைந்து தேட்டை யடித்துவருந் தியோரும், பிள்ளைகளை விட்டிற் பெருக்கிவரும் வீணர்களும், கற்றுயர.