உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உய்யுமோ தமிழர் நாடு?

உயர்தனிச் செம்மை வாய்ந்த ஒருமொழி தமிழாம் எங்கள் உயிர்மொழி நிலையை என்றன் உளத்தினில் நினைந்த வண்ணம் வியர்வையின் கொடுமை மாற வீதியில் உலவி வந்தேன் அயர்விலன் ஒருவன் என்முன் அணுகினன் அவனை நோக்கி

உனக்கென வேதம் உண்டோ? உண்டெனில் அதன்பேர் என்ன? எனக்கதைத் தெளியச் சொல்வாய் எனத்தமிழ் மகனைக் கேட்டேன்; “மனத்துறும் வேதம் நான்கு வாய்த்து. அவற்றின் பேரோ இனித்திடும் இருக்கு சாமம் எகர்.அதர் வணமே என்றான்.