பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பெருவழுதி பாண்டியன் நாகனார் முடிவை விளைவை முற்றுங் கிளத்துக அவ்வவர் நிலங்கள் அவ்வவர்க் குரிய கவ்வும் பேரவாக் கடிதில் ஒழிக. ஒருவர் மண்கொள ஒருவர் அவாக்கொளுஞ் சிறுமை தவிர்க சிந்தை விரிக; கொற்றவர் உரிமையில் மற்றவர் புக்குப் பற்றக் கருதும் பாழ்மனந் தவிர்க செற்றமுங் கலாமுஞ் செயநினை யாது பற்றுதல் கொள்ளும் பான்மை வளர்க, ஈண்டுநம் அழைப்பின் ஈண்டியோர் தாமும் வேண்டுகோட் கிணங்கி விழைத்திசை வளிப்பினும் கலைந்தபின் அவ்வவர் கருத்திற் கிணங்க மலைத்தும் பிரிந்தும் மாறுவ ராகின் அருஞ்சம ரன்றி அமைதி காணுதல் அரிதே யன்றோ? அதற்கென் செய்குவம்? அவ்வந் நாட்டுள் ஆன்றவிந் தடங்கிய செவ்வியர் சிலருள் ஒவ்வொரு நல்லோர்த் தேர்ந்தொரு குழுவாச் செய்தல் வேண்டும்: ஒர்ந்தவர் வழங்கும் ஒவ்வொரு சொல்லும் ஆணையாக் கொண்டு பேணுதல் வேண்டும். தொல்லை முதலாத் தொல்லை தரூஉம் எல்லைச் சிக்கல் எழுமேல் நீவிர் விற்கொடு பொருந விழையாதவர்தம் சொற்கொடு தீர்வு சூழ்ந்து காண்க: சிற்றர செனவும் மற்றர செனவும் சொற்றல் அறிவே தொலைதல் வேண்டும். அரசர் தம்முள் ஒருநிகராகி ஒருவர்க் கொருவர் உதவுத லன்றித் திறையெனக் கோடல் தீர்தல் வேண்டும்: நினைவில் தூய்மை நேர்மை யுண்மை வினையிலும் அவைதாம் வேர்கொளல் வேண்டும்: 305