பக்கம்:எக்கோவின் காதல்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

“ஓ! அப்படியா! சரி சரி; நான் அஞ்சிக்கொண்டே வந்தேன். நான் சொன்னவுடன் ஒரே அடியாக அழுவாய்; உன் அழுகையை நிறுத்திச் சமாதானப் படுத்தப் பெரும் பாடாய்ப் போய்விடும்; எப்படியெல்லாம் சமாதானம் சொல்வது என்றெல்லாம் திட்டம் போட்டுக் கொண்டு வந்தேன். நீ ஒரே வரியில் 'போய்வாருங்கள்' என்று சொல்லிவிட்டாய்! சரி அதெல்லாம் கிடக்கட்டும் எங்கே அந்தப் பாட்டை ஒரு முறை பாடு! கடைசியாகக் கேட்டுவிட்டுப் போகிறேன்” என்றான்.

“பாடினால் என்ன தருவீரோ?” என்றாள் அவள். “பாடுவதற்கு முன்பு கேட்டால் எப்படித் தருவது? பாடிவிட்டுக் கேள்! வழக்கப்படி தருகிறேன். பாடு முன்பே அச்சாரம் வேண்டுமோ?” என்று அவளுடைய கன்னத்தைக் கிள்ளினான்.

“வேண்டாம்; வேண்டாம்! இதோ பாடுகிறேன்” என்று சொல்லி விட்டு அவளும் பாடினாள். பாட்டு முடிந்ததும் “பொன்னம்மா! சினிமாவில் கேட்ட பாட்டுக்களை அப்படியே பாடுகிறாயே! நீ இந்தக் கிராமத்தில் பிறக்காமல் பட்டணத்தில் பிறந்திருந்தால் சினிமாக்காரர்கள் உன்னை 'ஸ்டார்' ஆக்கியிருப்பார்கள்”

"அதெல்லாம் இருக்கட்டும்? நீங்கள் ஊருக்குப் போகிறீர்களே! எனக்கு என்ன கொடுத்துவிட்டுப் போகிறீர்கள்?” என்று கேட்டாள்.

“உனக்கு என்ன வேண்டும்? இவ்வளவு நேரம் தந்தது போதாதா”