உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி 17 அடுத்து, இவ்வாறு தமக்குப் பொன்னும், பொருளும், பெண்ணும் வேண்டுந்தோறும் போர் மேற்கொள்வதினும் அவைகிடைக்கும் நாட்டையே உடைமையாக்கிக் கோடல் நன்று எனும் நினைவால், நாடு குறித்த போர் நிகழும். இவ்வாறு படிப்படியாக வளர்ந்து, தன் நாட்டிலும் வளம் மிக்க நாட்டைக் கைப்பற்றக் கருதி ஓர் அரசன் படை கொண்டுவர, அவனைவென்று ஒட்ட அந்நாட்டு அரசன் மேற்கொள்ளும் நிலைக்கு வளர்ந்து விட்ட போரையே, ஆசிரியர் தொல்காப்பியனார், போர் எனும் பெயர் சூட்டி விளக்கியுள்ளார். ஒரு நாட்டின் மீது ஆசை கொண்டு, அதைக் கைப்பற்றும் கருத்தோடு படையெடுத்து வந்தவன், அதை விரும்பி வந்தவனாதலின், அவன் அவ்வாறு வருவதன் முன், தன் வலி, மாற்றான் வலி, தனக்கு ஆகும் காலம், மாற்றானுக்கு ஆகும் காலம், தனக்கு ஏற்ற இடம் ஆகியவற்றை ஆராய்ந்து கண்டு, மாற்றானை வெற்றி கொள்ளும் பெரும்படையோடு, தனக்கு ஏற்ற காலம் வரை காத்திருந்து, தனக்கு ஏற்புடைய இடம் தேர்ந்து வந்திருப்பன்; ஆனால், அந்நாட்டிற்கு உரியவனோ பகையரசன், தன் நாட்டின் எல்லைப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான் என்ற செய்தியைக் கேட்ட வுடனே, உள்ள படையோடு விரைந்து களம் புகுவன். ஆகையால், வந்த வேற்றரசன் வெற்றி கொள்ள, ஊராண்டிருந்த உடையோன் தோற்று விடுதலும் உண்டு. நிறை வள்னும் பெரும் பொருளும் உடைய நாடாள் வோனுக்கு, இத்தகைய இடையூறுகள் அவ்வப்போது நேர்வது இயல்பு என்பதை உணர்ந்திருந்தமையால், அத்தகைய காலங்களில் தனக்கும் தன் நாற்படைக்கும் ப.த.போ.நெ-2