உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 11 நாடுகளில் வாழப் பெற்றவர், வறுமையிற் கிடந்து உழன்று வாழ்வின் பயன் பெறாராயினர். வளமும், வறுமையும், இவ்வாறு, வாழும் நிலத்தின் வளம், வளமின்மைகளுக்கு ஏற்ப அமைந்ததாகவும் அந்நிலையைத் தம் உழைப்பால் மாற்றி அமைக்கலாம் என்ற உணர்வோ, அது அவரவர் வாழும் நில இயல்பிற்கேற்ப வந்து வாய்த்துளது; அதற்கு நாமென்ன செய்யலாம்; அவரவர்க்குக் கிடைத்ததை அவரவர் நுகர்வதே நில இயல்பு போலும் என எண்ணி அடங்கும் உள்ள நிறைவோ, மக்களுக்கு உண்டாகவில்லை. அதனால், வறுமையில் கிடந்து வாழ்வின் பயன் காணாத மக்கள், வளம் கொழிக்கும் நிலத்தாரின் நிறைவைக் காணுந்தோறும் காழ்ப்புணர்வு மிகுந்தனர்; அப்பெரு வாழ்வு தமக்கும் வேண்டும் என ஆசை கொண்டது அவர் உள்ளம். அவ்வாசையை நிறைவேற்றிக் கொள்ள எதற்கும் துணிந்து நின்றார்கள் அம்மக்கள்; ஆனால், தாம்பெற்ற அவ்வின்ப வாழ்வை அவர்க்குப் பகிர்ந்தளிக்கும் விரிந்த உள்ளம் மேனிலை மக்களுக்கு உண்டாகவில்லை; அப்பேரின்ப வாழ்வு, இயற்கை, தமக்கு மட்டுமே வரைந்து வழங்கியுளது என்று எண்ணினார்கள். அதனால், அவ்விருதிறத்தார்க்குமிடையே மன வேறுபாடு இடங் கொண்டது; அவ்வாறு தொடக்கத்தில் தளிர்விட்ட அம் மனவேறுபாடே, பின்னர்ப் பகையாகவும், அதன் பயனாம் போராகவும் உருவு கொண்டு உலக அமைதியை உருக் குலைக்கத் தொடங்கியுள்ளது. பகுத்துணரும் அறிவாற்றலைச் சிறிது முன்னர்ப் பெற்ற ஒருவன். அறிவு பெறும் வாய்ப்பின்றித் தன்னோடு வாழும் பிறரும் அதைப் பெற வேண்டும்; அவர் அவ்வறிவு