பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 ன் புலவர் கா. கோவிந்தன் ஒருவனாலேயே, அந்நாட்டின் மீது போர் தொடுப்பதன் முன், இவற்றையெல்லாம் செய்ய இயலும், தன் நாட்டின் மீது பகை நாட்டான் போர் தொடுத்து வந்துளான் என்ற செய்தி கேட்ட அந்நாட்டிற்கு உரிய மன்னன், அச்செய்தி கேட்ட அக்கணமே, தன்பால் உள்ள படையோடு, போர்க்கோலம் பூண்டு போய், அப்பகைவனை வென்று தன் நாட்டின் எல்லைக்கு அப்பால் துரத்தத் துடிப்பனே யல்லது, பகைவன் எல்லைக்குள் புகுந்து தொல்லை தரும் போதில், அவனை வெல்லற்காம் காலம் வரட்டும், அவனை வெற்றி கொள்ளும் அளவு தன் படை வளரட்டும் என எண்ணி வாளா இருந்து விடுவானல்லன், தனித்து நின்றேனும் தடுத்து நிறுத்தவே துணிவன், ஆகவே, நாளும் கோளும், இடமும் படையும் எதிர்நோக்கி ஏற்பன செய்யும் நிகழ்ச்சிகளைக் கூறும் இத்துறை. மண்ணாசை கொண்டு வந்தானின் செயல் குறிப்பதே அல்லது அம்மண் காக்கக் களம் புகுவான் செயல் குறிப்பது அன்று. இயங்குபடை அரவத்திற்கு எடுத்துக்காட்டாக ஆசிரியர் இளம்பூரணார் தரும் "சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்” என்ற புறநானூற்றுச் செய்யுளில், “நல்லிசை வேட்டம் வேண்டி வெல்போர்ப் பாசறை அல்லது நீ ஒல்லாய்", "போர் எனின் புகலும் புனைகழல் மறவர், காடு இடைக்கிடந்த நாடு தனி சேய செல்வேம் அவ்வேம் என்னார், கல்லென் விழவுடை யாங்கண் வேற்றுப் புலத்து இறுத்து" என்ற தொடர்கள், அப்பாட்டுடைத் தலைவன் மண்ணாசையால், வளம்மிக்க பிற நாட்டின் மீது போர் தொடுத்துப் போனவனே ஆவன் என்பதை உறுதி செய்து நிற்றல் உணர்க. எரி பரந்து எடுத்தல்: ஒரு நாட்டைக் கைப்பற்றக் கருதி, அந்நாட்டின் மீது படையெடுத்துப் போவார், அந்நாட்டு