பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன. பெருங்கோப்பெண்டு

பாண்டிய மன்னர்களில் பூதப்பாண்டியன் என்பவன் ஒருவன் இருந்தான்; பாண்டியர்க்குரிய ஒல்லையூர் எவ் வாருே பகைவர் கைப்பட்டிருந்தது; இவன் அப் பகைவரை வென்று அவ்வூரை மீட்டமையால் ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் என அழைக்கப்பெற்ருன். பூதப்பாண்டியன் சிறந்த புலவன் ; அவன் பாடிய பாடல்கள் பல எட்டுத் தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன. சிறந்த வீரனும் பெரும் புலவனுமான இவன் மனைவியே பெருங்கோப் பெண்டு ; ஆகவே இவர் பூதப்பாண்டியன் தேவி பெருங் கோப்பெண்டு என அழைக்கப்பெற்ருர். இருவரும் பெரும் புலவர்; ஒருவரை யொருவர் அன்புடன் நேசித்து வாழ்ந்துவந்தனர்; பூதப்பாண்டியனுக்குப் பகைவர் சேர லும், சோழனும், அவர்கள் இவளுேடு போரிடவந்தனர் ; அவரோடு போரிடச் செல்லும் பூதப்பாண்டியன், ' என் ளுேடு போரிட இருபெரும் அரசர்கள் வந்துள்ளனர்; அவர் களைப் போரின்கண் புறமுதுகுகாட்டி ஒடச்செய்யேனுயின், அழகிய பெரிய மையுண்ட கண்களையுடைய சிறந்த என் மனைவியைப் பிரிந்து துன்புற்று வாழ்வேனுகுக,’ என்று கூறிய வஞ்சினம், -

" அவர்ப்புறம் கானே னயின் சிறந்த

போமர் உண்கண் இவளினும் பிரிக.”

என்பது. இது தன் மனேவிபால் அவன் கொண்டுள்ள அன் பின் மிகுதியைப் புலப்படுத்தும். பூதப்பாண்டியன் தன் மனேவியைப் பிரிக்கறியான் ; அவள் அழகும் அறிவும் கண்டு கண்டு மகிழ்வான் என்பது இதனுற் புலப்படும்.

இவ்வாறு அன்புகொண்டு வாழ்ந்து வருகையில், அவர்களிடையே எதிர்பாசாப் பிரிவு ஒன்று வந்து சேர்ந் தது. போரில் பூதப்பாண்டியன் இறந்துவிட்டான் ; தன் கணவன் இறந்துவிட்டான் என்ற செய்திகேட்டார் பெருங் கோப்பெண்டு; அவரை இன்றி எவ்வாறு வாழ்வேன்