இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
145
சாப்பிட்டா, எல்லாம் குணமாகிப்பிடும். ரெண்டு கல்யாணங்களை நீங்கதான் நடத்தி வைக்கப் போறீங்களே!” என்றாள்.
மறைந்து நின்று எட்டிப் பார்த்த ஞானபண்டிதனுக்கு நெஞ்சு பொருமியது ; கண்கள் கலங்கின. பெரியவர் தமது முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறார் என்ற அந்த ஒரு கசப்பான உண்மையை — விதியின் விதிக்குக் கட்டுப்பட்ட — மறுக்கவொண்ணாத அவ்வுண்மையை அவன் மறுக்க முடியாமல் தவித்த மாதிரி, அவ்வுண்மையை ஏற்று அங்கீகரித்துக் கொள்ளவும் முடியாதவனாக அவன் தவித்துத் தண்ணீராக உருகிக்கொண்டிருந்தான்.