உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

அதியன் விண்ணத்தனார்

உரைகள் பொய்யாகாவண்ணம் விரைந்தோடிவந்து, உலகத்தே உழவுமுதலாம் தொழில்கட்குத் துணையாய்ப் பரந்து சென்றது என்று சிறப்பிப்பாராயினர்.

“மாசில் பனுவல் புலவர் புகழ்புல
நாவிற் புனைந்த நன்கவிதை மாறாமை
மேவிப் பரந்து விரைந்து விளைநந்தத்

தாயிற்றே தண்ணம் புனல்.”

(பரிபாடல்: சு: எ கo)

வையை, கங்கையைப்போல் பெருமலையிடத்தே தோன்றப் பெறாமையால், அவ்வாற்றில் வரும் வெள்ளம் நீண்டகாலம் நிற்பதில்லை; திடுமெனப் பெருவெள்ளம் வருவதும், உடனே குறைவதும் அதற்கு இயல்பாம். பெருகுவதும், சுருங்குவதும் தன் இயல்பெனக் கொண்ட வையையின் இயல்புணர்ந்த புலவர், அஃது எப்பொழுதும் ஒருதன்மையில் நில்லாமல், தோன்றும் காலத்தே விரையத் தோன்றிச் சுருங்குங் காலத்தே, தோன்றிய காலத்தினும் விரையச் சுருங்கும் இயல்பினதான காமமோடு ஒக்கும் என்று கூறுகிறார். வையைக்கரைக்கண் நின்று, நான் பரத்தையர் ஒருவரையும் பார்த்தறியேன் என்று கூறிச் சூளுரைத்த தலைமகனை நோக்கி, “ஐய! காமம் ஒர் இயல்புடையதன்று; அஃது ஒருவர்பால் விரையப் பெருகும்: சிலர்பால் விரையச் சுருங்கும்; வையையும் விரையப் பெருகுவதும், விரையச் சுருங்குவதும் செய்யும்; ஆகவே, காதலும், வையையும் ஒர் இயல்பினவே; ஆகவே குளுறற்க!” என்று கூறினாள் தலைமகள் என்று பாடி வையை வெள்ளச் சிறப்பைப் பாடியுள்ளமை காண்க:

“காதலங் காமம்,
ஒருக்க ஒருதன்மை நிற்குமோ? ஒல்லைச்
சுருக்கமும் ஆக்கமும் குளுறல், வையைப்

பெருக்கன்றோ”

(பரிபாடல்: சு: எக - ச)

பெருகிவரும் வையையாற்று வெள்ளம், வரைபோலும் அணைகளை அழித்து ஓடி வருவதால், அதன் அலைகளால் இருகரைகளும் அலைப்புண்டு அழிவதையும், அவ்வழி