பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/குமுறும் உணர்ச்சிகள்

விக்கிமூலம் இலிருந்து

17. குமுறும் உணர்ச்சிகள்

பிறரிடம் சேர்க்கவேண்டிய செல்வங்களை அபகரித்து ஒளித்து வைத்துக்கொண்டு வாழ்கிறவன்கூட நிம்மதியாக இருந்துவிட முடியும். ஆனால் பிறரிடம் சொல்லவேண்டிய உண்மையை மறைத்து வைத்துக்கொண்டு அப்படி நிம்மதியாக இருந்துவிட முடியுமா? உண்மை என்பது நெருப்பைப் போல் பரிசுத்தமானது. தன்னை ஒளித்து வைத்திருக்கும் இடத்தைச் சுட்டுக்கொண்டே இருக்கும் அது!

பகவதியின் மரணம் என்ற எதிர்பாராத உண்மைதான் மறைத்து வைக்கப்பட்ட உள்ளங்களைச் சுட்டுக்கொண்டே இருந்தது. குமாரபாண்டியனுக்கு எப்போதுமே அவனுடைய அன்னையைப்போல் நெகிழ்ந்து இளகிவிடும் மனம் வாய்த்திருந்தது. இந்த நெகிழ்ச்சியே அரசியல் வாழ்க்கையில் அவனுடைய பலவீனங்களுக்குக் காரணமாக இருக்கலாம். அரசியல் நூல்கள் அரசனின் இலக்கணமாகக் கூறும் ஆண்மையின் கடுமையும், தன் கீழ்நிலையை எண்ணித் தனது பகைமையை அழித்து உயரக் கருதும், வைரம் பாய்ந்த கொதிப்பும் ஆரம்பமுதல் அவனுக்கு இல்லாமலே போயின. நா. பார்த்தசாரதி 883

தோற்றச் சாயலில் தந்தையைக் கொண்டிருந்த அவன், பண்பில் தாயைக்கொண்டு பிறந்திருந்தான். எதையும் மறைக்கத் தெரியாதவனாக யாரையும் கெடுக்க நினைக்காதவனாக இருந்தான் அவன். விரைவில் உணர்ச்சிகளுக்கு இலக்காகி அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளும் தன்மை அவனிடம் இருந்தது.

தங்கள் கப்பல் விழிஞத்தை அடைந்து கரையில் இறங்கிய சிறிது நேரத்துக்குள்ளேயே பகவதியின் மரணத்தைப் பற்றிச் சொல்லித் தன் துயர உணர்ச்சிகளை எல்லோரோடும் கலந்து கொண்டுவிடவேண்டுமென்று துடித்தான் அவன். அவனோடு வந்த குழல்வாய்மொழியோ, சேந்தனோ, அந்த உண்மை தெரிந்திருந்தும் அவனைப்போல் அதை வெளியிடுவதற்குத் துடிக்கவில்லை. அதை அப்போது வெளியிடக் கூடாதென்றே நினைத்தனர் அவர்கள் இருவரும். மகாராணி முதலியவர்களிடம் பகவதியின் மரணத்தைப் பற்றிச் சொல்லி விடுவதற்குக் குமாரபாண்டியனின் வாய் துடிப்போடு முனைந்ததைக் கவனித்துவிட்டாள் குழல்வாய்மொழி. அதை சொல்லிவிடாமல் தடுக்கவேண்டும் என்ற குறிப்பைத் தன் கண் பார்வையாலேயே சேந்தனுக்குத் தெரிவித்தாள் அவள். சேந்தன் உடனே மகாமண்டலேசுவரருக்கு அந்தக் குறிப்பைத் தெரிவித்தான். மகாமண்டலேசுவரர் உடனே குமார பாண்டியனைச் சிறிது தொலைவு விலக்கி அழைத்துக் கொண்டு போய், பகவதியின் மரணத்தைப் பற்றிய செய்தி யைத் தாம் சொல்லுமுன் வெளியிடக் கூடாதென்று வாக்குறுதி பெற்றுக்கொண்டுவிட்டார். அந்த ஒரு வாக்குறுதி மட்டுமன்று, தளபதி வல்லாளதேவனைக் கோட்டாற்றுப் படைக் கோட்டத்திலேயே தாம் சிறை வைத்துவிட்ட திடுக்கிடும் செய்தியையும் அவனிடம் தெரிவித்து, அதையும் வெளியிடக் கூடாதென்று மற்றொரு வாக்குறுதியும் பெற்றுக் கொண்டார். மகாமண்டலேசுவரரைத் தவிர வேறு எவராக இருந்தாலும், அத்தகைய நெருக்கடியான சமயத்தில் குமார பாண்டியனிட மிருந்து அந்த இரண்டு வாக்குறுதிகளையும் பெற்றுவிட

முடியாது. - - .

ஆனால் மழுங்காத கூர்மை பெற்ற அந்த அறிவின் செல்வர் எந்தெந்த விளைவுகளைத் தடுப்பதற்காக குமார பாண்டியனிடம் அந்த வாக்குறுதிகளைப் பெற்றாரோ, அந்த விளைவுகள் அப்போதே அங்கேயே அவருக்கருகில் நின்றன என்பது பின்புதான் அவருடைய அறிவுக்கே எட்டியது. தாமும், குமாரபாண்டியனும் எந்தப் பாறையருகில் நின்று பேச நேர்ந்ததோ, அதன் மறைவில் இருளில் தளபதியும், குழைக்காதனும் நின்றிருப்பார்கள் என்று அவர் எதிர்பார்த்திருக்கமாட்டார். திடீரென்று தமது மகுடத்தில் வந்து விழுந்து கீழே தள்ளிய கல் அவரை அப்படி எதிர்பார்த்துச் சிந்திக்க வைத்தது. அந்த இடத்திலேயே அந்த கணத்திலேயே அப்படி எறிந்துவிட்டு ஒடும் எதிரிகள் யார் என்று பிடித்துக்கொணர்ந்து பார்த்துத் தம்முடைய அவமானத்தைப் பெருக்கிக்கொள்ள விரும்பவில்லை அவர். அதனால்தான் பிடிப்பதற்காக ஒடிய சேந்தனையும், குமார பாண்டியனையும் கட்டாயமாகத் தடுத்து நிறுத்தினார் அவர் ஊழிபெயரினும் தாம் பெயராத சான்றாண்மையோடு சிரித்துக் கொண்டே கீழே விழுந்த மகுடத்தை எடுத்துக் கொள்ள அவரால்தான் முடியும், முடிந்தது. வெளியில் உணர்ச்சிகளைக் காட்டாமல் நடந்து கொண்டாலும் இதயத்துக்கும் இதயமான நுண்ணுணர்வின் பிறப்பிடத்தில் அந்தக் கல் விழுந்த நினைவு உரசியபோது ஒரு கனற்பொறி எழுந்தது. உள்ளே குமுறலும் வெளியே பரம சாந்தமுமாக நடந்து கொண்டார்.

இத்தனை காலமாகக் கண்பார்வையையும், பேச்சையும் கொண்டு ஒரு தேசத்தையே ஆட்டி வைத்த என் அறிவின் கெளரவம் இந்தக் கல்லினால் விழுந்துவிட்டதா? ஏன் இப்படி என் மனம் கலங்குகிறது? எத்தனைதான் மேதையாக இருந்தபோதிலும் நல்வினைப் பயன் தீர்கிற காலம் வரும்போது ஒரு மனிதனுடைய அறிவு பயனற்றுப் போகும் என்கிறமாதிரி நிலையில் வந்து விட்டேனோ நான்? என அவருடைய மனத்தில் உணர்ச்சிகள் குமுறின. அப்போது இருளில் விளக்கு அண்ைந்ததும் பயந்து அழுகிற குழந்தையைப்போல் முதல் முதலாக அவருடைய மனம் தன்னையும் தன் வினைகளின் பயனையும் எண்ணி உள் முகமாகத் திரும்பிப்பார்த்தது. ஒரு

தேசத்தையே மலைக்கச் செய்த அந்த அறிவு தனக்காகவும் சிறிது மலைத்தது. ஆனால் அதன் ஒரு சிறு சாயை கூட வெளியில் தெரிந்து கொள்ளுமாறு காட்டப்படவில்லை. இதுவரை பிறருடைய உணர்ச்சிகளைக் கலக்கி ஆழம்பார்த்த மனம் இப்போது உணர்ச்சிகளால் கலங்கியது.

குமாரபாண்டியனுடைய கப்பல் வந்த பின் நேர்ந்த நிகழ்ச்சிகள் ஒவ்வோர் உள்ளத்திலும் ஒவ்வொரு விதமான உணர்ச்சிகளைக் குமுறச் செய்திருந்தன. தெய்வத்துக்கும் மேலாக மதித்து, தான் பக்தி செலுத்திப் பணிபுரிந்து வந்த மகாமண்டலேசுவரரின் மேல் கல்லெறிந்துவிட்டு ஒடியவர்களைப் பிடித்துக் கட்டிவைத்து உதைக்க முடியாமல் போய்விட்டதே என்று சேந்தன் கொதித்தான். சேந்தன் வீர வணக்கம் செய்யும் பிடிவாதக் குணமுடையவன். தன்னை முழுவதுமே ஒரே ஒரு மனிதருக்கு மனம், மொழி, மெய் ஆகிய மூன்றாலும் அடிமையாக்கிக் கொண்டிருந்தான் அவன். காலஞ்சென்ற தன் தந்தைக்கும் முன் சிறையில் அறக் கோட்ட மணியக்காரனாக இருக்கும் தன் தமையனுக்கும்கூட இவ்வளவு அடங்கி ஒடுங்கிப் பணிவிடை புரிந்ததில்லை அவன். மகாராணி, குமாரபாண்டியன் ஆகியவர்களிடம் அவனுக்கு அன்பும், மரியாதையும் மட்டும்தான் இருந்தன. மகாமண்டலேசுவரர் என்ற ஒரே ஒரு மேதையிடம்தான் வசப்பட்டு மெய்யடிமையாகிக் கலந்திருந்தான். எவராலும் மாற்ற முடியாதபடி இந்த வீர வணக்கப் பண்பு அவனிடம் பதிந்து விட்டது. உலகம் முழுவதுமே மகாமண்டலேசுவரருக்கு எதிராகத் திரண்டு வந்தாலும் மூன்றரை முழ உயரமுள்ள அந்தக் குள்ளன் அவர் அருகில் மெய்க்காவலனாக நின்று கொண்டிருப்பான். மகாமண்டலேசுவரருடைய செல்லப் பெண் குழல்வாய்மொழிக்குக்கூட அவர் முகத்தை மட்டும் தான் பார்க்கத் தெரியும். ஆனால் சேந்தன் அவருடைய அகத்தையும் நெருங்கி உணர முடிந்தவன்.

அதனால்தான் மகாமண்டலேசுவரர் அவமானப்பட நேர்ந்ததைக் கண்டு,அவன் உள்ளம் அவ்வளவு அதிகமாகக் குமுறியது. குமார பாண்டியனும் அதைக் கண்டு மனம் கொதித்தானென்றாலும், அந்தக் கொதிப்பு எவ்வளவு வேகமாக

உண்டாயிற்றோ, அவ்வளவு வேகமாகத் தணிந்து மறந்து மறைக்கப்பட்டுவிட்டது. அவன் மனத்தில் அதற்குக் காரணம் நினைப்பதற்கும் குமுறிக் கொதிப்பதற்கும் வேறு நிகழ்ச்சிகளும் இருந்தன. அவன் மனத்தில், பகவதியின் மரணம் என்ற உண்மையை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதால் அத்துன்பமே போர்க்களத்துக்குப் போகிற வழியெல்லாம் அவன் மனத்தைச் சுட்டுக் கொண்டிருந்தது. இன்னொரு செய்தியும் அவன் மனத்தை உறுத்தியது. ஒருவருக்கும் தெரியாமல் தளபதியை மகா மண்டலேசுவரர் ஏன் சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்?’ என்று குழம்பும் நிலையும் குமார பாண்டியனுக்கு இருந்தது. அவசரமாக விழிஞத்திலிருந்தே போர்க்களத்துக்குப் புறப்பட்டபோது இத்தனை மன உணர்ச்சிகளையும் எண்ணச் சுமைகளாகச் சுமந்து கொண்டுதான் புறப்பட்டான் அவன். ஆனால் போருக்குப் போகிறோம் என்ற உணர்வு பெரிதாகப் பெரிதாக இவை மங்கிவிட்டன.

மகாராணி வானவன்மாதேவியுடன் அரண்மனைக்குப் புறப்பட்ட குழல்வாய்மொழியின் மனத்திலும் உணர்ச்சிகள் குமுறின. மகாராணியும், விலாசினியும் பகவதியைப் பற்றிப் பேசிக்கொள்ளத் தொடங்கினால் அவளுக்கு உடனிருக்கவே முடியாதுபோல் ஒரு வேதனை ஏற்பட்டது. தெரிந்த உண்மையை வெளியிட முடியாமல் தவித்தாள். மகாராணியுடன் அரண்மனைக்கு வராமல் தந்தையோடு இடையாற்றுமங்கலம் போகலாமென்று நினைத்திருந்த அவளை மகாராணிதான் வற்புறுத்திக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டாரே! இன்னொரு வருத்தமும் அவளுக்கு இருந்தது. கப்பலில் வரும்போது அவளிடம் கோபித்துக் கொண்டு பேசாமலிருந்த இளவரசர் விழிளும் வந்த பின்னும் போருக்குப் புறப்பட்டுப் போகிறவரை ஒரு வார்த்தைகூடச் சுமுகமாகப் பேசவில்லை! போர்க்களத்துக்குப் புறப்படுகிற போது கண்குறிப்பாலாவது விடைபெற்றுக்கொள்வது போலத் தன்னைப் பார்ப்பாரென்று அவள் எதிர்பார்த்தாள். அதுவும் இல்லை. இளவரசரின் இந்தப் புறக்கணிப்பு அவள் மனத்தைப் புண்ண்ாக்கியிருந்தது.

அரண்மனையில் மகாராணி, விலாசினி, புவனமோகினி என்று கலகலப்பாகப் பலருக்கு நடுவிலிருந்தாலும் குழல்வாய் மொழியின் மனம் எங்கோ இருந்தது. அரண்மனையில் தங்கியிருந்தபோது ஒருநாள் பேச்சுப் போக்கில் மகாராணி, புவனமோகினி! கோட்டாற்றுக்கு யாரையாவது அனுப்பித் தளபதியின் மாளிகையில் பகவதி இருக்கிறாளா என்று விசாரித்து அழைத்து வரச் சொல்லேன்’ என்று கூறியபோது உடனிருந்த குழல்வாய்மொழி துணுக்குற்றாள். தன் உணர்ச்சியை அடக்கிக் கொள்ள மிகவும் சிரமப்பட்டாள். இராசசிம்மனைப் பற்றியும், அவன் போரில் வெற்றி பெற்றுத் திரும்பப் போவதைப் பற்றியும், வெற்றியோடு வரும்போது அரண்மனையை எப்படி அலங்களித்து, அவனை எவ்வாறு வரவேற்பது என்பதைப் பற்றியும் குது.ாகலமாக அவர்களோடு பேசினார் மகாராணி. அந்த மாதிரிப் பேச்சுக்களிலெல்லாம் குழல்வாய்மொழியும் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டாள். குழல்வாய்மொழியைப் பொறுத்தவரையில் ‘விலாசினி’ என்ற பெண் புதிராக இருந்தாள். அவ்வளவாக மனம் விட்டுப் பழகவில்லை. மகாராணி விலாசினியையும், புவனமோகினியையும் தன்னுடன் சமமாக வைத்துப் பழக விடுவதும், பேசுவதும் குழல்வாய்மொழிக்குப் பிடிக்கவில்லை. அவள் இடையாற்றுமங்கலம் நம்பியின் பெண், அன்பைக்கூடத் தனக்கென்று தனி மரியாதையோடு எதிர்பார்த்தாள். இடையாற்றுமங்கலம் என்ற அழகின் கனவில் இளவரசி போல் அறிவின் கர்வத்தோடு சுற்றித் திரிந்தவளுக்கு எல்லோருக்கும் சம உரிமை கொடுக்கும் மகாராணியோடு அரண்மனையில் தானும் ஒருத்தியாக இருப்பது என்னவோ போலிருந்தது.

புவனமோகினியே மகாராணிக்காகப் பகவதியைப் பற்றி விசாரித்துக் கொண்டுவரக் கோட்டாற்றுக்குப் புறப்பட்ட போது குழல்வாய்மொழியின் பயம் அதிகமாயிற்று. எந்த வகையிலாவது மகாராணிக்கு உண்மை தெரிந்துவிட்டால் என்ன செய்வது என்று மனம் புழுங்கினாள் அவள். -

என் மனம் இந்த உண்மையை மறைப்பதற்காக ஏன் இப்படிப் பயப்படுகிறது? நான் அந்தப் பெண்ணைக் கொலையா செய்தேன்? திமிர் பிடித்தவள் தானாக ஓடிப்போய் இறந்தால் அதற்கு நான் என்ன செய்வேன்? என்று நினைத்துத் தன் மனத்தைச் சமாதானப்படுத்திக் கொள்ள முயன்றாள் அவள், ஆனாலும் ஏதோ பெரிய கேடுகளெல்லாம் அந்த மறைக்கப்பட்ட உண்மை மூலம் வர இருப்பதுபோல் உண்டாகும் பீதி அவளை மீறி வளர்ந்தது. யாரிடமும் சொல்லாமல் அரண்மனையைவிட்டு இடையாற்று மங்கலத்திற்கு ஓடிப்போய்விடலாம் போலிருந்தது. ஒரு சமயம் மகாராணி அவளைக் கேட்டார்: “என்னோடு இருப்பதில் உனக்கு ஒரு கவலையும் இருக்கக் கூடாதம்மா! இந்த அரண்மனையை உங்கள் இடையாற்றுமங்கலம் மாளிகையைப்போல நினைத்துக்கொள். என்னை உன் தாய் மாதிரி எண்ணிக் கொள். வந்தது முதல் நீ திடீர் திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டு கவலைப்படுகிறாய் போலிருக்கிறது. உன் தந்தையைப் பிரிந்து என்னோடு இங்கு வந்துவிட்டதால் வருத்தப்படுகிறாயா? இதற்கே இப்படி வருந்துகிற நீ அவ்வளவு நாட்கள் தந்தையைப் பிரிந்து இலங்கைவரை எப்படித்தான் போய் வந்தாயோ?”

மகாராணி இப்படிக் கேட்டபோது தன் உணர்ச்சிகள் அவருக்குத் தெரியுமாறு நடந்து கொண்டோமே என்று வெட்கப்பட்டாள் குழல்வாய்மொழி.

சிவிகையில் புறப்பட்டுத் தளபதியின் தங்கையைப் பற்றி விசாரித்து வருவதற்குக் கோட்டாறு சென்ற புவனமோகினி நள்ளிரவாகியும் அரண்மனை திரும்பவில்லை. மகாராணி என்னவோ, ஏதோ என நினைத்து மனங்கலங்கினார். மறுநாள் பொழுது விடிகிற நேரத்தில் பரபரப்பான நிலையில் அரண்மனைக்கு ஓடிவந்த புவனமோகினியைக் கண்டு எல்லோரும் திடுக்கிட்டார்கள்.