திரு. வி. க., பாரதி காலத்திலேயே பிரபல பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் விளங்கினார். அவர் முதலில் தேசபக்தன் என்ற பத்திரிகைக்கும், பின்னர் நவசக்தி என்ற பிரபல செய்திப் பத்திரிகைக்கும் ஆசிரியராக இருந் தார். மேலும், தமிழ்நாட்டில் தொழிற்சங்க இயக்கத்தைத் தோற்றுவித்த மூலவர்களில் அவரும் ஒருவர். அக்டோபர் புரட்சிக்குப் பின் இந்தியாவில் தானாகவே எழுந்த வேலை நிறுத்த அலையோடு, தொழிற்சங்கங்களை ஸ்தாபிக்கும் ஆரம்பம் முயற்சிகளும் தொடங்கியபோது, அத்தகைய முதல் முயற்சி சென்னையிலேயே தொடங்கப்பட்டது; மேலும். 1918 - 19 ஆண்டிலேயே பக்கிங்ஹாம் அண்டு கர்னாட்டிக் மில் தொழிலாளர் சங்கத்தைச் சென்னையில் உருவாக்கிய முன்னோடிகளில் திரு. வி. க.வும் ஒருவர். "சென்னைத் தொழிலாளர் (பி அண்டு சி) சங்கத்"தின் தலைவராகவும் அவர் இருந்தார்.
திரு. வி. க. ஐம்பதாம் ஆண்டுகளில் தாம் காலமாகிற வரையிலும் தமது பொது வாழ்க்கைக் காலம் முழுவதிலும், சோவியத் யூனியனின் உறுதியான, உற்ற நண்பராகவும், கம்யூனிஸ்டு இயக்கத்தின், தொழிலாளர் இயக்கத்தின் அனுதாபியாகவுமே இருந்து வந்தார். நாற்பதாம் ஆண்டுகளில் அவர் தமது முதுமைப் பருவத்திலும் கூட, பி ஆண்டு சி மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்தைத் தலைமை தாங்கி நடத்தினார்; அதன் காரணமாக அவர் பல நாட்கள் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டார். அவர் சைவசமய சித்தாந் தத்தில் ஆழ்ந்த பற்றும் பக்தியும் கொண்டிருந்த போதிலும், அவரது பல நூல்களிலும் பத்திரிகைக் குறிப்புக்களிலும் அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் சோவியத் நாட்டில் சாதிக்கப்பட்ட சோஷலிச வாழ்க்கை முறையை வெகுவாகப் பாராட்டியே எழுதினார்.
அவரது தலைசிறந்த நூல் எனக் கருதத்தகும் "வாழ்க்கைக் குறிப்புகள்" என்ற சுயசரிதையில், 1919 இறுதியில் சென்னை வந்த திலகரைத் தாம் சந்தித்து, அவரோடு மார்க்சியக் கோட்பாடுகளைக் குறித்தும், இந்திய மக்களின் விடு
26