உள்ளடக்கத்துக்குச் செல்

திருவருட்பயன்/குறள்:1-20

விக்கிமூலம் இலிருந்து

திருவருட்பயன்- மூலம்

[தொகு]

ஆசிரியர்: உமாபதி சிவாச்சாரியார்

[தொகு]

காப்பு

நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானங்
கற்குஞ் சரக்கன்று காண்.



பதிமுதுநிலை

[தொகு]

குறள்வெண்பா 1 (அகரவுயிர் )

[தொகு]

(இறைவனது இயல்பு கூறும் குறள்)


அகர வுயிர்போ லறிவாகி யெங்கும் () அகர உயிர் போல் அறிவாகி எங்கும்

நிகரிலிறை நிற்கும் நிறைந்து. (01) நிகர் இல் இறை நிற்கும் நிறைந்து.


பதப்பிரிப்பும் அமைப்பும்
நிகரில் இறை, அகர உயிர்போல், அறிவாகி, எங்கும் நிறைந்து நிற்கும்.


இதன்பொருள்
நிகரில் இறை= ஒப்பில்லாத இறைவன்; அகர உயிர்போல்= எழுத்துகளுக்கு எல்லாம் அகரம் உயிராக நின்று விளங்குவதுபோல், அறிவாகி= அறிவுக்கு அறிவாகி, எங்கும்= எல்லாவிடங்களிலும், நிறைந்துநிற்கும்= நிறைந்து (வியாபித்து) நிற்பான்.
விளக்கம்
எழுத்துகளுக்கு எல்லாம் என்பது வருவித்து உரைக்கப்பட்டது. 'இறை' என்பது தங்குவது என்று பொருள்படும், இறைவன் எல்லாவிடங்களிலும் தங்கியுள்ளவன் ஆதலால் இறைவன் எனப்பட்டான். அதாவது, இறைவனில்லாத இடம் இல்லை என்பதாம். விஷ்ணு என்பதும் அது; எங்கும் வியாபித்துள்ளவன் என்பதாம். அகரஒலி எல்லா எழுத்துகளிலும் கலந்திருக்கின்றது, அதுபோலக் கடவுள் எல்லாப்பொருளிலும் கலந்து இருக்கின்றார் என்பதுபொருள். 'நிற்கும்' என்பது அசைவற்று நிற்கும் என்பதாம். அசைவு விகாரம், இறைவன் விகாரமற்றவன், மாறுதலற்றவன் என்பதாம். 'அகரம்' என்பதால் உருவநிலையும், 'அறிவாகி' (அறிவு உருவமாகி) என்பதால் உருவமற்றநிலை'யும், 'உயிர்போல்' என்றதனால் அருவுருவ நிலையும் குறிக்கப்பட்டன.
எங்கும் நிறைந்தவன், எல்லாம் அறிந்தவன், எல்லாம் வல்லவன் என்ற இறைவனின் பண்புகள் முறையே இறை, அறிவாகி, நிகரில் என்பனவற்றால் குறிக்கப்பட்டன.

குறள்வெண்பா 2 (தன்னிலைமை )

[தொகு]

தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தருஞ்சத்தி () தன் நிலைமை மன் உயிர்கள் சாரத் தரும் சத்தி

பின்னமிலா னெங்கள் பிரான். (02) பின்னம் இலான் எங்கள் பிரான்.

தம்முடைய நின்மலம் மலம் முதலாகவுள்ள ஒப்பற்ற நிலையை நிலைபெற்ற ஆன்மாக்கள் பொருந்தக் கூடி அருளுகின்ற சிவன் திருவருட்சத்தியுடன் பிரிப்பின்றி ஒன்றாய் இருப்பவர்.

குறள்வெண்பா 3 (பெருமைக்கும் )

[தொகு]

பெருமைக்கும் நுண்மைக்கும் பேரருட்கும் பேற்றி () பெருமைக்கும் நுண்மைக்கும் பேர் அருட்கும் பேற்றின்

னருமைக்கு மொப்பின்மை யான். (03) அருமைக்கும் ஒப்பு இன்மையான்.

நிறை, நொய்மை, கருணை, கிடைத்தற்கருமை ஆகிய தன்மைகளால் இறைவனுடன் ஒப்பிட யாருமற்றவர்.

குறள்வெண்பா 4 ( ஆக்கி)

[தொகு]

ஆக்கி யெவையு மளித்தா சுடனடங்கப் () ஆக்கி எவையும் அளித்து ஆசுடன் அடங்கப்

போக்குமவன் போகாப் புகல். (04) போக்கும் அவன் போகாப் புகல்.

பிரமாவைக் கொண்டு படைத்தலும், திருமலைக் கொண்டு காத்தலுஞ் செய்விக்கும், எல்லாவற்றையும் சங்கரிப்பவராய் உள்ள முதல்வரே, எல்லாவற்றிற்கும் புகலிடமாவார்.

குறள்வெண்பா 5 ( அருவும்)

[தொகு]

அருவு முருவு மறிஞர்க் கறிவா () அருவும் உருவும் அறிஞர்க்கு அறிவாம்

முருவ முடையா னுளன். (05) உருவம் உடையான் உளன்.

அருவும், உருவும், அருவுருவுமாகவுள்ள ஒன்பது பேதமான திருமேனிகளை உடையவரே அறிவுக்கறிவாக விளங்கும் ஞானவடிவினராகிய சிவபெருமான்.

குறள்வெண்பா 6 (பல்லாருயிர் )

[தொகு]

பல்லா ருயிருணரும் பான்மையென மேலொருவ () பல் ஆர் உயிர் உணரும் பான்மை என மேல் ஒருவன்

னில்லாதா னெங்க ளிறை. (06) இல்லாதான் எங்கள் இறை.

ஆன்மாக்களுக்கு எல்லாம் அறிவித்தருள இறைவன் இருப்பது போல, இறைவனுக்கு அறிவிக்க மேலொருவர் இல்லை. இறைவனே பரம்பொருள்.

குறள்வெண்பா 7 (ஆனாவறி )

[தொகு]

ஆனா வறிவா யகலா னடியவர்க்கு () ஆனா அறிவாய் அகலான் அடியவர்க்கு

வானாடர் காணாத மன். (07) வான் நாடர் காணாத மன்.

தேவர்களால் அறிய முடியாத இறைவன், தன்னை அன்புடன் வழிபடும் மெய்யடியார்களை விட்டு நிங்காது, அருள் செய்வார்.

குறள்வெண்பா 8 (எங்கும் )

[தொகு]

எங்கு மெவையு மெரியுறுநீர் போலேகந் () எங்கும் எவையும் எரி உறு நீர் போல் ஏகம்

தங்குமவன் றானே தனி. (08) தங்கும் அவன் தானே தனி.

வெந்நீரில் உள்ள சூடு அதன் ஒவ்வொரு துளியிலும் வியாபித்து இருப்பது போல, இறைவன் உலகத்தில் எல்லாவற்றிலும் கலந்திருப்பினும் அவற்றுன் தன்மை சாராமல் தனித்து நிற்கும் இயல்பினன்

குறள்வெண்பா 9 (நலமிலன் )

[தொகு]

நலமில னண்ணார்க்கு நண்ணினர்க்கு னல்லன் () நலம் இலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன்

சலமிலன் பேர்சங் கரன். (10) சலம் இலன் பேர் சங்கரன்.

கடவுள் விருப்புவெறுப்பு இல்லாதவர்; தம் வழிநிற்பார்க்குப் பேரின்பமாகிய சுகத்தைக் கொடுப்பதால் சங்கரன் என்னும் திருப்பெயர் உடையவர்.

குறள்வெண்பா 10 (உன்னுமுள )

[தொகு]

உன்னுமுள தைய மிலதுணர்வா யோவாது () உன்னும் உளது ஐயம் இலது உணர்வாய் ஓவாது

மன்னுபவந் தீர்க்கு மருந்து. (10) மன்னு பவம் தீர்க்கு மருந்து.

அறிவிக்கறிவாய் நின்று பிறவிப்பிணியைத் திர்க்கும் இறைவன் வழிபடின் முத்தியின்பங் கிடைக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

2. உயிரவை நிலை

[தொகு]

குறள்வெண்பா 11(பிறந்தநாள் )

[தொகு]

பிறந்தநாள் மேலும் பிறக்குநாள் போலுந் () பிறந்த நாள் மேலும் பிறக்கும் நாள் போலும்

துறந்தோ ரிறப்போர் தொகை. (01) துறந்தோர் இறப்போர் தொகை.


குறள்வெண்பா 12 (திரிமலத்தார் )

[தொகு]

திரிமலத்தாரொன்றதனிற் சென்றார்க ளன்றி () திரி மலத்தார் ஒன்று அதனில் சென்றார்கள் அன்றி

யொருமலத்தா ராயு முளர். (02) ஒரு மலத்தர் ஆயும் உளர்.


குறள்வெண்பா 13 (மூன்றுதிறத் )

[தொகு]

மூன்றுதிறத் துள்ளாரும் மூலமலத் துள்ளார்கள் () மூன்று திறத்து உள்ளாரும் மூல மலத்து உள்ளார்கள்

தோன்றலர்தொத் துள்ளார் துணை. (03) தோன்றலர் தொத்து உள்ளார் துணை.


குறள்வெண்பா 4 (கண்டவற்றை )

[தொகு]

கண்டவற்றை நாளுங் கனவிற் கலங்கியிடுந் () கண்டவற்றை நாளும் கனவில் கலக்கி இடும்

திண்டிறலுக் கென்னோ செயல். (04) தி்ண் திறலுக்கு என்னோ செயல்.


குறள்வெண்பா 5 (பொறியின்றி )

[தொகு]

பொறியின்றி யொன்றும் புணராதே புந்திக் () பொறி இன்றி ஒன்றும் புணராதே புந்திக்கு

கறிவென்ற பேர்நன் றற. (05) அறிவு என்ற பேர் நன்று அற.


குறள்வெண்பா 16 (ஒளியும் )

[தொகு]

ஒளியு மிருளு முலகு மலர்கட் () ஒளியும் இருளும் உலகும் அலர்கண்

டெளிவி லெனிலென் செய. (06) தெளிவு இல் எனில் என் செய.


குறள்வெண்பா 17 (சத்தசத்தை )

[தொகு]

சத்தசத்தைச் சாரா தசத்தறியா தங்கணிவை () சத்து அசத்தைச் சாராது அசத்து அறியாது அங்கண் இவை

யுய்த்தல்சத சத்தா முயிர். (07) உய்த்தல் சதசத்தாம் உயிர்.


குறள்வெண்பா 18 (இருளிலிரு )

[தொகு]

இருளி லிருளாகி யெல்லிடத்தி லெல்லாம் () இருளி்ல் இருள் ஆகி எல் இடத்தில் எல்லாம்

பொருள்க ளிலதோ புவி. (08) பொருள்கள் இலதோ புவி.


குறள்வெண்பா 19(ஊமன்கண் )

[தொகு]

ஊமன்கண் போல வொளியு மிகவிருளே () ஊமன் கண் போல ஒளியும் மிக இருளேயாம்

யாம்மன்கண் காணாத வை. (09) மன் கண் காணாதவை


குறள்வெண்பா 20 ( அன்றளவு)

[தொகு]

அன்றளவு மாற்றுமுயி ரந்தோ வருள்தெரிவ () அன்று அளவும் ஆற்றும் உயிர் அந்தோ அருள் தெரிவது

தென்றளவொன் றில்லா விடர். (10) என்று அளவு ஒன்று இல்லா இடர்.

பார்க்க:

[தொகு]
திருவருட்பயன்-குறள்:21-40
திருவருட்பயன்-குறள்:41-60
திருவருட்பயன்-குறள்:61-80
திருவருட்பயன்-குறள்:81-100
திருவருட்பயன்
"https://ta.wikisource.org/w/index.php?title=திருவருட்பயன்/குறள்:1-20&oldid=718569" இலிருந்து மீள்விக்கப்பட்டது