உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆர்க்டிக் பெருங்கடல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

கண்டம்

மூன்று கண்டங்களுக்கிடையே அமைந்திருந் தாலும், இதற்குரிய பகுதி ஆர்க்டிக் பகுதி யாகும். பேரண்டஸ் கடலும், கிரீன்லாந்து கட லும் இதன் துணைக் கடல்கள். முக்கிய துணைக் கடல் வெண் கடல். இவை மாரிக்காலத்தில் பனிக் கட்டியால் மூடப்படுவதில்லை. இதில் தீவுகள், விரிகுடாக்கள், மலைத் தொடர்கள் முதலியவை உள்ளன. இதுவும் குறைவாக ஆராயப்பட்ட கடலே.

படிவுகள்

இதன் அடியிலுள்ள படிவுகள் நிலப்பகுதி யிலிருந்து ஆறுகளால் கொண்டுவரப்பட்டவை. இதில் பெரிய அமெரிக்க ஆறுகளும், சைபீரிய ஆறுகளும் கலக்கின்றன. இது நீர்க் கூட்டுக்களின் வாயிலாகப் பசிபிக்கடலோடும் அட்லாண்டிக் கடலோடும் சேர்கிறது.

புயல்கள்

உலகக் கடல்களில் மிகக் குறைவாகப் புயல் கள் ஏற்படும் கடல் இது. பொதுவாக, இது நம் நண்பனே; பகைவன் அல்ல. இக் கடலில் உயர்ந்த மலைகளும் சமவெளியும் உள்ள இடங்களில் மட் டுமே புயல்கள் ஏற்படும்.

வெப்ப நிலை

இதன் மேற்பரப்பு வெப்ப நிலைகள் 29° F. இந்த வெப்பநிலை நிலையானது என்று சொல்வதற்கில்லை.