இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆர்க்டிக்கில் முக்கிய சுற்றுலாப் பகுதிகள் உள்ளன. அவை பின்வருமாறு :
ட்ராம்சோ
இஃது ஆர்க்டிக் பகுதியை அடையும் வாயில். ஒரு பாலம் இத்தீவினை ஆர்க்டிக் நிலத்துடன் இணைக்கிறது. இங்குள்ள துறைமுகத்தில் சீல், திமிங்கிலம் ஆகியவை வேட்டையாடப்படுகின்றன. இது முக்கிய திமிங்கில வேட்டை நிலையமாகும். வடமுனை ஒளிகளை ஆராய இங்கு ஓர் ஆராய்ச்சி நிலையமும் உள்ளது.
ஸ்பிட்ஸ்பர்கன்
இது ஆர்க்டிக் கடலில் உள்ளது. இங்கு மகிழ்ச்சியாகத் தங்கித் துருவக் கரடி, சீல் ஆகிய வற்றை வேட்டையாடலாம்,
கிகுமா
இது ஸ்வீடனின் லாப்லாந்து ஆகும். நன்கு அமைக்கப்பட்டுள்ள நவநாகரிக நகரம், இயற்கை அழகுமிக்கது. பைன், ஸ்புரூஸ், லர்ச் அடங்கிய காடுகளும், பெர்ரி வகைகளும் பார்ப்பதற்கு மிக அழகானவை.