பக்கம்:ஆர்க்டிக் பெருங்கடல்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதலாக வட முனையை அடைந்தார். இவர் தம் குழுவினருடன் 450 மைல்களை நடந்தே கடந்தார்; அடைந்தார் வட முனையை. டாக்டர் குக் என் பாரும் 1908 இல் வட முனையை அடைந்ததாக உரிமை கொண்டாடினார்.

வில் கிட்ஸ்கி

உருசிய நாட்டைச் சார்ந்த இவர் இரண்டு பனி தகர்க்கும் கப்பல்களைக் கொண்டு தம் பயணத்தை 1915 இல் மேற்கொண்டார். சைபீரியாவின் ஆர்க்டிக் கடற்கரை பற்றி அரிய செய்திகளை இப்பயணத்தின் மூலம் திரட்ட முடிந்தது. இன்றும் அப்பகுதியை அளவையிட உருசியா படகுகளை அனுப்பிய வண்ணம் உள்ளது.

ராஸ்முசன்

நார்வே நாட்டைச் சார்ந்த இவர் 1920 - 30 ஆம் ஆண்டுகளுக்கு இடையே பயணங்களை மேற்கொண்டு கிரீன்லாந்தைப்பற்றியும் எஸ்கிமோக்களைப் பற்றியும் அதிகம் அறிந்தார்.

பயர்டு

விமானங்களும் ஆர்க்டிக் பகுதிகளுக்குச் செல்ல இயலும்; ஆராய்ச்சி செய்ய இயலும்; என்னும் நிலை 1925 ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்டது. இந்த ஆண்டில் அமுண்ட்சன் என்பார் விமான மூலம் வட முனையை அடைய முயன்றார்; முடியவில்லை; காரணம் போதிய பெட்ரோல் இல்லை.