உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆர்க்டிக் பெருங்கடல்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

அணிந்து கொள்வர். இவை விலங்குகளின் மயிர்களில் இருந்தும், தோல்களில் இருந்தும் செய்யப் பட்டவை. ஜாக்கெட்டுகளுக்கு மேல், மயிர்த் தோல்கள் கதகதப்பிற்காக இணைக்கப்பட்டிருக்கும். இவற்றிற்குப் பர்காஸ் என்று பெயர். பெண்கள் எலும்புகளை ஊசியாகவும், தசை நார்களை நூலாகவும் கொண்டு தோல்களைத் தைத்துத் தங்களுக்கு வேண்டிய உடைகளைத் தயாரித்துக் கொள்வர். ஆக, இவர்களது ஆடை அல்லது உடை நாம் அணிவது போன்று பருத்தியாலோ பட்டாலோ ஆனதல்ல.

இல்லங்கள்

இவர்கள் வீடுகள் கூண்டுகள் போல இருக்கும். கோடைக்கால வீடுகள், தோல்கள், மரம், திமிங்கல எலும்புகள் கொண்டு கட்டப்படும். மாரிக்கால வீடுகள் கற்களாலும், கட்டைகளாலும் கட்டப்படும். மேல் பகுதி மண் அல்லது பனிக் கட்டியினால் மூடப்படும். தோல்கள் திரைகளாக வீட்டின் நுழைவு வாயிலில் குளிரைத் தாங்கத் தொங்க விடப்படும். வீடு கட்டப் போதிய பொருள்கள் கிடைக்காவிட்டால், பனிக்கட்டியைக் கொண்டே வீடுகளைக் கட்டுவார்கள். இவை தற்பொழுது கட்டப்படுவதில்லை. நீண்ட கால வேட்டையாடுதலுக்குத் தற்பொழுது இவை பயன்படுகின்றன.