உள்ளடக்கத்துக்குச் செல்

கல்வி எனும் கண்/முதியோர் கல்வி

விக்கிமூலம் இலிருந்து

7. முதியோர் கல்வி

இந்தியா உரிமை பெற்று நாறபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. அப்பொழுதே எல்லாருக்கும் (3-15) வயதுச் கல்வி அறிவு தரவேண்டும் என்ற முயற்சியில் நாடு ஈடுபட்டு. இருந்தால் இன்று 50 வயதுக்கு உட்பட்டவர் அனைவரும் கற்றவர்களாகவே இருப்பர். இன்று மருத்துவப் பட்டம் பெறுபவர் அரசாங்க்ப் பணியில் சேர விரும்பினால் ஓராண்டு கிராமங்களில் பணியாற்ற வேண்டும் என்ற விதி கொண்டு வரப் போவதாகக் கூறுகின்றனர். சாதாரணப் பட்டம் பெற விரும்புவர்களுக்கும் படிப்பு முடிந்தபின் ஓராண்டு கிராமத்தில் பணிபுரிந்தால்தான் பட்டம் பெறமுடியும் என்று ஏற்பாடு செய்யவேண்டும் எனச் சிலர் கருதுகின்றனர். இந்தக் கருத்தினைத்தான், நான் முன்னரே குறித்தபடி, 1947இல் சுதந்திரம் பெற்ற உடனே இந்தியா முதல்சட்டமாக இந்த முறைக்கு ஏற்ப, ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்று ‘இந்திய முதற் சட்டம்’ என்ற நூலில் எழுதினேன். அதில் பட்டம் பெறுபவர் ஓர் ஆண்டில் கிராமங்களில் சென்று, அங்கேதங்கி, அவர்களொடு பழகி, அவர்தம் ஏற்றத் தாழ்வுகள் அறிந்து, துயர்துடைத்து, கல்வி அளித்து, தொழில்பெருக வழிகண்டு என்னென்ன செய்ய வேண்டும் என விளக்கியுள்ளேன். நாடகமணி T.K. சண்முகம் அதைப் பாராட்டித் தாம் அதனை நாடகமாக நடத்த விரும்புவதாகவும் கூறினார். இரண்டொரு பள்ளிகள் நடித்தன. அந்நூலுக்கு அன்றைய கல்வி அமைச்சராக இருந்த மாண்புமிகு திரு. பக்தவத்சலம் அவர்களும் பாராட்டி முன்னுரை தந்துள்ளார்கள். எனினும் இந்த முறை இத்தனை ஆண்டுகள் கழித்தும் இன்றும் பின்பற்றப் பெறவில்லை. இம்முறை அன்றே வழக்கத்தில், வந்திருக்குமாயின் கிராமங்களில் கல்வி கற்றோர் எண்ணிக்கை மிக அதிகமாக வளர்ந்திருக்கும். கல்லாதார் இல்லை என்ற நிலையே உருவாகி இருக்கும். ஆனால் இன்று அந்த நிலை இல்லை. இன்றைய நிலையில் எழுத்தறியார் நிலை பற்றி அரசாங்க வெளியீட்டினையே இங்கே தர நினைக்கின்றேன். நாட்டின் அவலநிலையினையும், மேற்கொண்ட முயற்சிகளையும். செய்ய வேண்டியதாய காலப் பணியினையும் அது விளக்குவதை ஓரளவு காண இயலும். உலகில் உள்ள கல்லாதார் எண்ணிக்கையில் பாதி அளவு நம் நாட்டில்தான் இருக்கும் நிலையை எண்ணி ஒவ்வொரு இந்தியனும் வருந்தி வெட்கப்பட வேண்டாமா? எங்கோ ஒருசாரார் முன்னேறி விட்டதாகவும் பெரும்பாலோர் படித்ததாகவும் கூறிக் கொண்டு, ஏழைகள்-கிராம மக்கள்-பெண்கள் இவர்களுள் பெரும்பாலோர் படிக்காதிருக்கும் நிலையினை எண்ணிப், பார்ப்பதில்லை. அதிலும் இன்று நகரங்களில் வளரும் ஆங்கில மோகத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் மாக்கள், தம்மைப் போல் இந்திய மகனாக-மகளாக வாழும் எண்ணற்ற மக்களை எண்ணிப் பார்ப்பதில்லை; மாறாக ஏளனம் செய்வர். அரசாங்க முயற்சிகளும் அவ்வளவாகப் பயன் தருவதில்லை. அந்த அரசாங்க அறிக்கையினை இங்கே தருகின்றேன்.

COMMITTEES PERSPECTIVE

7-2-1. The Resolution setting up the committee to review NPE, inter alia, states:

“Despite efforts at social and economic development since attainment of Independence a majority of our people continue to remain deprived or education, which is one of the basic needs for human development. It is also a matter of grave concern that our people comprise 50 per cent of the world's illiterate, and large sections of children have to go without acceptable level of primary education. Government accords the highest priority, to education-both as a human right and as the means for bringing about a transformation towards a more humane and enlightened society. There is need to make education an effective instrument for securing a status of equality for women, and persons belonging to the backward classes and minorities. Moreover, it is essential to give a work and employment orientation to education

POST POLICY IMPLEMENTATION

7-3-0 In pursuances of the Policy, a National Literacy Mission was established in 1988. In quantitative terms, the Mission seeks to impart functional literacy to 80 million illiterate persons in 15-35 age group: 80 million by 1990 and an additional 50 million by 1995. The emphasis of the Mission is not on mere numbers but on attainment of certain pre - determined norms and parameters of literacy, numeracy, functionality and awareness. Under this programme 2,84,000 centres are functioning in the country with an estimated involvement of 84 lakh adult learners (about 35 lakh men and 49 lakh women). Six lakh literacy kits have been delivered to students, volunteers. Over 30,000 Jan Shikshan Nilayams have been sanctioned to . provide post - Literacy programmes. Over 800 voluntary Agencies have also been involved in the process. A Mass Campaign under NLM was launched by the then Prime Minister in May, 1988. Similar campaigns were launched by 24 States and UTs on the same date and after. The Director General. NLM in his presentation before the . NPERC stated that the Programme has suffered due to shortage of funds. As against the barest minimum requirement of funds amounting to Rs. 189 crores during 1989-90, the actual amount provided was of the order of 76.17 crores. The position was somewhat improved in 1990-91 when a sum of Rs.96 crores was provided, considering the magnitude of the problem of illiteracy the large uncover area and the need for mobilisation (A total of Rs.227 crores was spent under NLM during the years 1987-88 to 1989-90). Much more funds are required even for implementing a purely volunteer-based, campaign-oriented plan of action than what has been provided. (Towards an Enlightened and Humane Society-Pages 198 & 194)

நம் நாட்டிலேயே மலையாள மாநிலத்தில் நூற்றுக்கு நூறு கற்றவர்கள் இருக்கும் போது ஒவ்வொரு மாநிலமும் அத்தகைய முயற்சிகளை ஏன் மேற்கொள்ளலாகாது. , ஒரு சில மாநிலங்கள் ஓரளவு முயல்கின்றன. எனினும் போதிய அளவு இல்லை என்பதையே நாட்டுநிலை காட்டுகின்றது. தமிழ்நாட்டினைப் பொறுத்தவரையில் கோவை மாவட்டத்தில் அம்மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு எழுத்தறிவிப்பு இயக்கம் அமைந்ததென அறிகிறோம். (திரு. இராமமூர்த்தியின் வெளியீடு 196) 5.25 இலட்சம் எழுத்தறியா மக்களுக்கு உதவ, அதை 21 பகுதிகளாகப் பிரித்து சுமார் 50,000 தனியார் உதவி நிறுவனங்கள் வழியே செயலாற்றி 1990 ஏப்பிரல் முதல் 1992 மார்ச்சு முடியுமுன், அம்மாவட்டத்தையே முழுதும் கற்ற மாவட்டமாக்க முயல்வதாக அரசாங்கக் குறிப்பு காட்டுகிறது. எனினும் அங்கேயும் அவர்கள் நினைத்தபடி பயன்விளையவில்லை என்றே கூறுகின்றனர். ஆம்! கடந்த நாற்பது ஆண்டுகளில் இளம் பிள்ளைகள் (5-14) கட்டாயமாகப் பயில வேண்டிய திட்டத்தினை எப்பாடுபட்டேனும் நிறைவேற்றி இருந்தால் இன்று இந்த அவலநிலை இராது அல்லவா! தற்போது தமிழ்நாட்டில் புத்துணர்ச்சி அரும்பியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தினைப் பூரணக்கல்வி அறி மாவட்டமாக்க முனைந்துள்ளனர் என்ற செய்தி அண்மையில் வெளிவந்தது. கன்னியாகுமரி மாவட்டம் ஏறக்குறைய நிறைவு எய்தும் நிலையில் உள்ளது எனக் கூறுகின்றனர். நாட்டில் பல நிறுவனங்கள் தாமே முன்வந்து, இந்த எழுத்தறிவு இயக்கத்தில் பங்கு கொண்டு பாடுபட முனைகின்றது எனக் கேட்டறிகிறோம். பள்ளியிலும் கல்லூரியிலும் பயிலும் மாணவர்கள் தாமாகவே முன்வந்து ஊர்தோறும் சென்று இந்த ஆக்கப்பணிக்கு ஆவன செய்கிறார்கள் என அறிகிறோம். இன்றைய மாநில அரசும் இந்த வகையில் மத்திய அரசின் துணையுடன் பல கோடி செலவிட்டு இந்தஎழுத்தறிவு இயக்கத்தினைச் செயல்படுத்துகின்றது என்பதைக் கேட்க மகிழ்ச்சி பிறக்கின்றது. அரசாங்கம் பல ஆண்டுகளாக இதற்கெனக் கல்வித்துறையில் ஒரு தனிப்பிரிவே அமைத்து, அதற்கெனத் தனி இயக்குநரையும் இருக்க வைத்து, ஊர்தோறும் செயல்படுவகையில் பல அதிகாரிகளை நியமித்து ஆவன செய்து வருகின்றது. ஒவ்வொரு பஞ்சாயத்து எல்லையிலும் தனி அலுவலர்கள் நியமிக்கப் பெற்று, அவர்கள் ஊர்தொறும் சென்று முதியோர் கல்வி நிலையங்கள் அமைத்துப் பாடுபடுகின்றனர். முதியவர்களுக்கு வேண்டிய பலகை, புத்தகம், கரும்பலகை, போன்றவற்றை இனாமாக அளித்து அழைக்கின்றனர். முதலில் ஒரு சிலர் சேர்ந்தாலும் மெல்ல மெல்ல. அவருள் பலர் விட்டு விலகுகின்றனர் என்ற குரலே கேட்கிறது. ‘வந்து படிப்பதற்கு எனக்கென்ன தருவாய்’ என்ற கேள்வியும் கேட்கப் பெறுகிறதாம்! எங்கோ ஒரு சில இடங்களில் தாமாகவே வலிய வந்து கற்கும் பெரியவர்கள்-எழுத்தறிவற்றவர் இருக்கிறார்கள் எனக் கேள்விப்படுகிறோம். அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் படங்கள், விளக்க நூல்கள், இன்ன பிறவற்றையும் அரசாங்கம் தருகிறது. அவர்களுக்கு எப்பொழுது ஓய்வு கிடைக்குமோ அப்போது வகுப்புகளை நடத்தவும் தயாராக உள்ளது. எனினும் மக்க்ள் ஆர்வம் காட்டவில்லை என்கின்றனர். இளம்பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளிலேயே அந்த நிலை என அறிகிறோம் பகல் உணவும் பாலும் பழமும் பிறவும் அளிக்கின்ற காரணத்தால் தான் பள்ளியில் தற்போது அதிகமான பிள்ளைகள் பயில்கிறார்கள் என்று அரசாங்கமே தகவல் தருகின்றதே. இந்த நிலை எல்லாம் போக்க வழி இல்லையா! மருந்தில்லையா அரசாங்க முனைப்பு போதாதா! பணியாளர் முயற்சி பற்றாக்குறையில் அமைகின்றதா? தெரியவில்லையே.

1981 மக்கள் கணக்குப்படி நம் நாட்டில் பயிலாத ஆண்கள் 53% ஆகவும் பெண்கள் 75% இருந்தனர். இப்போதோ இந்த நூற்றாண்டின் இறுதியிலோ நான் மேலே காட்டியபடி, உலகக் கல்லாதார் எண்ணிக்கையில் பாதி இந்தியாவில் இருக்கும் என்கின்றனர். இதற்குக் காரணம் மக்கள் இதில் போதிய கவனம் செலுத்தாமையேதான். நாட்டில் ஒன்றும் கல்லாதவன்-கைத்தொழில் வினைஞன் ஒரு நாளைக்கு 50, 60 என்றும் அதற்கு மேலும் சம்பாதிக்கிறான். பெண்களும் அப்படியே இருபத்தைந்து, முப்பது என நாள்தோறும் சம்பாதிக்கின்றனர். இளம்பிள்ளைகளும் கூட 15 வயதில்-இன்னும் 10 வயதில் கூட 10 அல்லது 15, 20 வரை நாட்கூலி பெறுகின்றனர். இவற்றைச் சேமித்து வாழ்க்கையினைச் செம்மைப்படுத்துகிறார்களா என்பது வேறு. ஆனால் இவ்வாறு பெறும் வருவாயினை விடுத்து, படிக்க வருவது கடினம். ‘படித்தால் என்ன இதைவிட அதிகமாக வரப் போகிறதா?’ என்ற கேள்வி அவர்கள் உள்ளத்தில் எழுகின்றது. மேலும் பலர் மாலை வேளைகளில் குடிக்கும் போதைப் பொருளுக்கும் அடிமையாகின்றனர். பெண்கள் வீட்டு வேலைக்கு உட்படுகின்றனர். இரவிலோ அன்றி விடியற் காலையிலோ சமையல் செய்து, உண்டு. வேலைக்குப் போகும் போதும் மதிய உணவுக்காக உடன் எடுத்துச் சென்றால்தானே நாள் முழுதும் உழைக்க முடியும். இந்த நிலையில் அவர்கள் படிப்பதெங்கே? பிள்ளைகள் வரலாம். அவர்களை நேரிய வழியில் ஆற்றுப்புடுத்த வேண்டாமா? அரசாங்கம் இந்த அவலநிலையைப் போக்க ஏதேதோ வழிவகைகளைக் கண்டு கொண்டுதான் வருகிறது. ஆயினும் அவற்றைச் செயல்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் களையப்பெறல் வேண்டும்.

பெரியோர்களுக்கு என ஓராண்டோ ஈராண்டோ கல்விக் கூடங்கள் நடைபெறுகின்றன. அவற்றுள் பயில வருவோர் குறைந்தது பாதிநாட்களாவது வரின் ஓரளவு எழுத்தறிவு பெற முடியும். ஆனால் அதற்கும் பஞ்சம் என்கின்றனர். ஏதோ மற்றவர் வற்புறுத்தலுக்காகச் சேர்ந்ததாகவும் வேலை வெட்டி அற்றவர் செயல் இது என்றும் நினைக்கின்றவர் இன்றும் பலர் உள்ளனர். இந்த நினைவினை மாற்ற வேண்டும். ஓரளவாவது படித்தாலன்றிச் சமூகத்தில் உயர முடியாது என்ற உண்மை அவர்கள் உள்ளத்தில் உணர வழிவகை காண வேண்டும். உடன் செயலாற்றின் தக்க பயன் விளையும்.

ஒரு காலத்தில் வரிகட்டுபவருக்குத்தான் சட்டசபைத் தேர்தல் வாக்குரிமை என்றிருந்தது. பின் எழுதப் படிக்கத், தெரிந்தவர்களுக்கு எல்லாம் வாக்குரிமை உண்டு என்று விதி வகுக்கப்பெற்றது. அக்கால நிகழ்ச்சிகளை நான் எண்ணிப் பார்க்கிறேன். கிராமங்களிலும் நகரங்களிலும் எழுத்து வாசனையே அறியாத பலர். எப்படியாவது படிக்க வேண்டும்-கை எழுத்தாவது போட வேண்டும் என்று முயன்று, அதன் வழியே வாக்காளர் ஆகும் தகுதி பெற முயன்றனர். அந்தச் சில ஆண்டுகளில் கணக்கு எடுத்திருந்தால் எழுத்தறிவு இயக்க வளர்ச்சி நன்கு விளக்கும். இத்தனைக்கும் அந்தக் காலத்தில் அரசாங்க உதவியோ-அட்டிற் சாலைகளோ இலவச நூல் உதவியோ பிறவோ இல்லை. பலர் யாரையாவது அண்டிக் கற்றனர். அந்த நிலை மாறி உரிமை பெற்றபின் எல்லாரும் இந்நாட்டு மன்னராக உயர்ந்து விட்டமையின், படித்தவர் படியாதவர் -செல்வர் வறியர் யாவராயினும் பதினெட்டு நிரம்பப் பெற்றால் வாக்களராகவும், அதன் வழிச் சட்டமன்ற உறுப்பினராகவும்-ஏன்?-நாடாளும் அமைச்சராகவும் கூட ஆகலாம் என்ற நிலை வந்துவிட்டமையின் படிப்பில் கவனம் குறைந்தது. படிக்காத மேதை என்ற பட்டமும் வழங்கப் பெறும்-எப்படியும் சம்பாதிக்கலாம் என்ற நிலையும் கூடவே சேர்ந்துவிடும் பின் முதியோர் கல்வி எப்படி வளரும்? இந்த அவலநிலை ஜனநாயக நாட்டினை எப்படித் தலைதூக்க வைக்கும்? இதனாலேயே நாட்டில் பல்வேறு பிரிவுகளும் சாதி சமயச் சண்டைகளும் பிறகொடுமைகளும் நிகழ்கின்றன. ஒரு காலத்தில் கல்லாதவர் கற்றவர் சொற்கேட்டு அடங்கி நல்லவற்றை மேற்கொண்டு வாழ்ந்தனர் எனக் காண முடிகிறது.

1977-78இல் ஆரம்பித்த, நான் மேலே காட்டிய அரசாங்கச் சார்புடைய எழுத்தறிவியக்கம்-முதியோர் கல்வி முறை பல வகையில் இடர்ப்பட்டு சிலவிடங்களில் தொடங்கிய பள்ளிகள் மூடப்பட்டு பயனற்ற நிலையில், 1989இல் புதிய முயற்சியினை அரசாங்கம் மேற்கொண்டது. இப்புதிய முறை கேரளம், கோவா, புதுவை, குஜராத் ஆகிய மாநிலங்க்ளில் நன்கு நடைபெற்றுப் பயனும் விளைந்துள்ளது என்பர். (p. 198). இதன் வழி, பல தனியார் நிறுவனங்கள் தாமே முன் வந்து, கல்லாதார் இருக்குமிடம் தாம சென்று, அவர்கள் ஓய்வு பெறும் நேரம் அறிந்து, அவர்கள் மன நிலைக்கும் மன நிறைவுக்கும் ஏற்ற வகையில் மெல்ல மெல்ல எழுத்தறிவித்து ஊக்குவிக்கும் நிலையினைக் காண்கின்றோம். இதனாலேயே அண்டை மாநிலமான கேரளத்திலே நூற்றுக்கு நூறு ஆணும் பெண்ணும் எழுத்தறிவு பெற்றுச் சிறக்கிறார்கள் என அறிய முடிகிறது. தமிழ்நாடு இப்போது தான் அந்த வழியினைப் பின்பற்ற நினைக்கிறது.

கேரளம் போன்ற ஒரு சில இடங்களில்-குறைந்த அளவில் கல்லாதவர் வாழும் பகுதிகளில் காணும் வெற்றியினை நாட்டு வெற்றியாகக் கொள்ள முடியாது. கல்லாமாக்கள் பெருவாரியாக உள்ள பகுதிகளில் தனி நிறுவனங்களும் அரசும் சேர்ந்து, பெருத்த முயற்சியிலும் செலவிலும் பாடுபட்டால் ஒரு வேளை வெற்றி காணலாமோ, என எண்ணுகிறேன். ஏறக்குறைய நூறு ஆண்டுகளாகக் கேரளமும்-மிசோராமும் இடையறாது பாடுபட்டு நின்ற காரணத்தினாலேதான் அங்கெல்லாம் நிறை நலமாக முதியோர் கல்வி வெற்றி பெற, கல்லாதார் இல்லையெனப் போற்றப் பெறுவது அறிகிறோம் (p. 200). அத்தகைய முயற்சியினை எல்லா மாநிலங்களும் மேற்கொண்டால் விரைவில் நாட்டில் கல்லாதார் இல்லையாவர். ஆம்! கற்ற ஆணும் பெண்ணும் அக்கல்லா மனிதனுடனோ பெண்ணுடனோ பழகி நின்று, அவர்கள் மனநிலை அறிந்து மெல்ல மெல்லக் கல்வியின் அவசியத்தைப் புகட்டி சிறு சிறு வகையில் எழுத்தறிவித்து, அவர்தம் மொழி வளர்க்கும் நெறியில் பயிற்றுவித்து, தாம் சோர்வு அடையாமல் தளர்ச்சியுறாமல் பயிற்றாளராகச் செயல்புரிவராயின் நிச்சயமாகப் பயன் விளையும். இங்கே இராமமூர்த்தி குழு இந்த முதியோர் கல்வி வளரத் தந்த சில கருத்துக்களை அப்படியே உங்கள்முன் வைக்கின்றேன் அவை அனைத்தும், என்னாலோ-மற்றவர் அனைவராலுமோ ஏற்றுக்கொள்ளக் கூடியவை என்று நான் கொள்ளாவிடினும் இக்கருத்து செயலாற்றுவோருக்குத் தூண்டுகோலாக அமையும் என்பது என் துணிவு.

RECOMMENDATIONS

  1. Imperting of literacy should be placed in the context of the developmental needs of the adult. Adult education programmes should be accompanied by a wide range of measures relating to health, nutrition, housing, and employment needs. They should also address themselves in issues of fundamental rights, laws, secularism and democracy. After creating awareness in respect of these essentlal needs and issues the adult learner himself should be expected to ask for adult literacy, the stary should be in respect of creation of awareness for essential needs and from there work backward to adult literacy. ii) While the mass campaign strategy may be tried out further, the alternative model being employed by the Department of Education through Mahila Samakhya may be closely monitored and its application for adult literacy examined-considering that the objective of this project is to create awareness regarding issues of survival and there by generate felt needs. iii) The mass campaign strategy as well as the Mahila Samakhya model may be objectively evaluated to look for meanigful lessons for the future. iv) On most of the developmental problems and matters, realting to fundamental rights, social justice etc. the majority of the illiterates more often than not find themselves in positions of conflict with the official authorities. Therofore genuine initiatives for adult - education programmes. voluntary agencies, community groups, political parties and their mass organisations should be facilitated. v) While NLM goes ahead with its planned literacy campaign in the Eighth Five Year Plan period, an independent study group should be commissioned to evaluate the programme, particularly with a view to arrive at an understanding of what may be appropriate strategies to remove adult illiteracy in the quicker possible time . The evalution may also look into the various alternative models and study their relevance with respect to diverse sociocultural and political conditions in different parts of India. The mininum objective basis what approaches do not yield results, so that, five years later, at least those models may not be encouraged. vi) The Department of Education should coordinate with the Department of Rurel Development and Ministry of Labout and organise programmes for vocational skills for the adult illiterates—facilitating flow of funds from programmes like TRYSEM (Training of Youth for Self Employment). Community Polytechnics should also be involved in a large scale in imparting vocational skills amongst the adult illiterates. (This will enhance. the employability of the adult illiterates and thereby create awareness regarding basic needs and issues of life, in the process generating demand for adult literacy as a felt need ) vii) The non-literates should be placed in an environment in which they have constant interface with the challenge of the written word. viii) Illiterate adults are those who have either not had access to education or having had access, have been unable to complete their schooling. A person has to remain in school atleast for a minimum of four years to attain a relatively irreversible level of iiteracy. Literacy should be a form of basic training making it possible for the adult to acquire some knowledge as may be necessary. It is imperative that Universalisation of Elementary Education is given top priority in educational planning and resource allocation. The objective should be to ensure that no child in the early nineties shall grow into an illiterate adult in. the next century. (If this can be achieved, we would have then succeeded in controlling the chief contributor to illiteracy in India, i.e. low rate of participation in school education.) Pages-200 & 201 (Towards an Enlightened and Humane Society) இத்துடன் கற்றவர் அஞ்சல் வழியே மேல் நிலைக் கல்வி பயலும் முறையினையும் எண்ணிப் பார்க்க வேண்டும். கல்லாதார் ஒருபுறம் இவ்வாறு கற்க, கற்றவர் மேலும் கற்க விரும்பும் நிலை வளர்ந்து வருகிறது. இந்திய நாட்டுப் பல்கலைக் கழகங்கள் அனைத்தும் அஞ்சல் வழிக் கல்வியை அறிமுகப்படுத்தியுள்ளன. இது பற்றி முன்னரே ஓரளவு கண்டோம். பல்கலைக் கழகப் பட்டப் படிப்பினையும் உயர்பட்டப் படிப்பினையும் அஞ்சல் வழியே கற்றுத் தருகின்றன. அதற்கென ஒவ்வொரு பல்கலைக் கழகமும் தனித்துறையினையே அமைத்துப் பாடங்களைத் தயாரித்து அனுப்புகின்றன. ஒரு சில முறையாக இயங்க, சில தவறுகின்றன. பட்டம் பெற எண்ணிப் பல வகையில் கனவு காணும் பலர் அல்லலுறவும் காண்கிறோம். பாடங்களை முறையாக அனுப்புவதும் இடையிடையே குறித்த இடங்களில் பல ஆசிரியர்களைக் கொண்டு பாடங்கள் நடத்துவதும் முறையாக நடைபெறுகின்றன. பெரும்பாலும் பணிபுரியும் ஆடவரும் மகளிரும் இவற்றில் சேர்ந்து பயன்பெற விரும்புகின்றனர்; பெறுகின்றனர். எனினும் ஆய்ந்து கண்டவர்கள் இவர்கள் தரம் முறையாகப் பயிலுபவர் தரத்தினும் தாழ்ந்தே உள்ளது என்பர். ஆண்டொன்றுக்கு 80 நாள்கள் (நாளைக்கு 5 மணி நேரம்) நல்லாசிரியர்கள் கீழே அமர்ந்து பல்வேறு பாடங்களை முறையாகப் பயின்று, பருவ இடைத் தேர்வு, காலாண்டு,அரையாண்டுத் தேர்வுகள் எழுதி திருத்தப் பெற்று, தங்கள் தவறுகளை அவ்வப்போது உணர்ந்து திருந்தும் மாணவர்களோடு இவர்களை ஒப்பிடுவது பொருந்தாததுதான் எனினும் இவர்களும் முயன்று, பயின்று வெற்றி பெறுகின்றமை பாராட்டுதற்குரியதாகும். ஆயினும் ஒருசில பல்கலைக் கழகங்கள் பலரையும் தேர்ச்சியுறச் செய்தால்தான் நம் பல்கலைக் கழகத்துக்கு அதிக மாணவர் வருவர்-அதிக வருவாய் கிடைக்கும் என்ற எண்ணத்தில் தவறுகள் இழைப்பதாகக் கேள்விப்படுகிறோம். மேலும் எங்கோ ஒருவர் பாடங்களைத் தயாரிக்க, வேறு எங்கோ ஒருவர் ஆண்டுக்கு ஓரிரு முறை பாடம் நடத்த, எப்போதோ கடும் கோடையில் ஒரே முறை தேர்வுக் களத்தில் குதிக்கும் இவர்கள் நிலை எண்ணத்தக்க ஒன்றாகும். மேலும் ஆய்வுக்களத் தொடர்புடைய பட்டங்களையும் ஆசிரியர் பயிற்சிக் கல்வி போன்றவற்றையும் இந்த அஞ்சல் வழிக் கல்விக்கு அப்பாலே இருக்க வைத்தல் நலமாகும். இந்தக் கொள்கையில் பல்கலைக் கழக மானியக் குழு விரைவில் சில சீர்திருத்தங்களைச் செயல்படுத்த நினைக்கும் குறிப்புகள் நாளிதழில் வெளிவருகின்றன. தற்போது திறந்தவெளிப் பல்கலைக் கழகங்களும் செயலாற்றுகின்றன. சில பல்கலைக்கழகங்கள் அதற்கெனத் தனித்துறைகளை அமைத்துள்ளன. படிப்பே அறியாதவரோ அன்றிச் சிறிது பயின்றவரோ நேரே பட்டத் தேர்வுக்குச் செல்ல வழி உண்டு. சில பல்கலைக் கழகங்கள் அடிப்படைப் படிப்பை வலியுறுத்தும் ஒரு நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுதல் ஒன்றும் போதுமானது, இது அவ்வளவு சிறந்ததா? அவற்றுள் பயின்றோர் உண்மையில் கற்றவர்கள் ஆவார்களா என்பதை வரும் காலம்தான் நமக்கு உணர்த்தும், எப்படியோ நாட்டில் எழுத்தறியாதவர்களை எழுத்தறிவு உள்ளவர்களாக்குதற்கும் சற்றே படித்தவர்கள் மேலும் மேலும் படித்துப் பட்டங்கள் பெறுவதற்கும் பலப்பல புதிய முறைகள் வகுக்கப் பெற்றுள்ளன. இவை அனைத்தும் செம்மையாகச் செயலாற்றின் நினைத்த பயனைப் பெற இயலும், இன்றேல் கோடிக் கணக்கான நாட்டுப் பணம் செலவாவதோடு காலமும் வீணே கழிந்தொழிந்ததாக முடியும். எனவே இத்தகைய கல்வி நிலையங்களைக் கட்டிக் காக்கும் பொறுப்புள்ளவர்கள் நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் தாம் ஆற்ற வேண்டிய இன்றியமையாத-தேவையான சேவைகளை மனத்தில் கொண்டு நாட்டுக் கல்வியே முக்கியம் என்ற உணர்வில் செயலாற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகிறேன். எல்லாரும் கல்வி கற்று, மேலும் கற்று, மேன்மேலும் கற்று நாட்டின் நலனைக் கட்டிக் காக்க வேண்டும் என்பதே என் ஆசை!