பக்கம்:இராவண காவியம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. கண்டவனுங் கொண்டுசென்ற கையுறையைத் திருமுன்பு கனிவாய் வைத்துத் தண்டமிழோர் பெருந்தலைவ! தமிழ்வாழ்க வாழ்கவெனத் தமிழர் கோனும் வண்டுலவு முல்லையந்தார் மாயோய்!நந் தமிழ்வாழ்வென் வாழ்வே நீயும் கொண்டகுறை யிலவேயென் றுடனிருத்தி நலமெல்லாங் கொ ளக்கொண் டானே. 42. இனித்திடுசெந் தமிழ்மொழியைத் தாய்மொழியாக் க கொண்டு பயின் வினிது வாழும் தனித்தமிழர்க் கொருநாளுங் குறையுண்டோ ? துயில்கொள்ளாத் தரியார் தம்மை நினைத்தபடி யுயிருண்ணு நீளிலைவேற் ) பெருமன் னா! நினது காப்பின் வினைத்திறம்வா ழியவென்று மாயோனுந் தலைமகன் பால் விடைகொண் டானே. 43. சென்றவனுந் தமிழ்வாழுத் திராவிடரோ டொருங்குகுழி இச் செறிகார் மேயும் குன்றமதன் பலவளமுங் கண்டு மகிழ்ந் துரியரொடு கூடி யாடி- ஒன்றிய செந் தமிழரொடு மலேவிருந்துங் காவிருந்து முவப்பி னுண்டே என்றுமிலா வுளமகிழ்வோ டேழிசைச்செந் தமிழ்ப்பயன் றுய்த் திருந்தா னிப்பால். வேறு 44. இவ்வாறிவ ராகிட. வேகிளியும் ஒவ்வா திவு ளோதுவ வோதவெனச் செவ்வாய்திற வாது தியங்கிடவே அவ்வாய்திறந் தேசொலு மாய்மொழியாள். 45. ஒன்றாகிய தோழிய ரோடுசெலீஇக் கன்றோடு கரும்பிடி யானையது சென்றாடு செழுஞ்சுனை தேனொழுகுங் குன்றாடு நினைவு குறித்தனளே. 43. தமிழ்வர்ழுந்திராவிடா -புலவர். இப்பால்- அதன பிறகு. ' 44. தியங் கிட-வருந்த. அவ்வாய்- அழகியவாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/136&oldid=987647" இலிருந்து மீள்விக்கப்பட்டது