உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 தென்மொழி வரலாறு. மூன்றும், பொருளதிகாரம் அறுநூற்றறுபத்தாறு மாக 1612 சூத்திரங்களுடையது. இந் நூலுக்கு உரைசெய் தவர்கள் கடைச்சங்கப் புல வர்களுள் ஒருவராகிய கல்லாடரும் இளம்பூரணரும் சேனாவரையரும் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் என ஐவர். நூன்மரபாவது இந்நூலுக்கு முதற்காரணமாகிய எழுத்துக்களினது இலக்கணங் கூறும் இயல். மொழிமரபாவது எழுத்தானாகு மொழியினது இல க்கணமுணர்த்தும் இயல். பிறப்பிய லாவது எழுத்துக்கள து பிறப்புணர்த்து மியல் புண ரி..லாவது மொழிமரபிற் கூறிய மொழிகளைப் பொ து வகையாற் புணர்க்குமுறைமை கூறும் இயல். தொகைமரபாவது இன்ன இன்ன வீற்றுமொழிகள் இன்னவாறு புணருமெனத் தொகுத்துத் தொகுத்துக் கூறுமியல். உருபியலாவது உருபுகளோடு பெயர் புணருமாறு உணர்த்தும் இயல். உயிர் மயங்கியலாவது, உயிரீறுநின்று வன்கணத்தோ டுஞ் சிறுபான்மை யேனைக்கணங்களோடும் மயங்கிப் புண ருமியல்புணர்த்தும் இயல் புள்ளிமயங்கியலா வலு , புள்ளியY று வன்கணத்தோ டுஞ் சிறுபான்மை யேனைக் கணத்தோடும் புணருமாறு கூறும் இயல். குற்றியலுகரப் புணரியலாவது, குற்றியலுகரவெழுத் துக்கள் புணருமாறு கூறும் இயல்.